நேற்று 13-ம் திகதி பிரான்ஸ் பாரிஸ் நகரில் ( THEATER MENILMONTANT) திரையிடப்பட்ட “With you With Out you” ஒப நெத்துவ, ஒப எக்க’ உன்னுடன், நீ இல்லாமல் திரைப்படத்தின் இயக்குநர் பிரசன்ன விதானகேயின் அறத்திற்கும் துணிச்சலுக்குமே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.‘ஒப நெத்துவ ஒப எக்க’ (With you Without you ) தாஸ்தயேவ்ஸ்கி 1876-ல் எழுதிய A Gentle Creature என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. போருக்குப் பின்னான இலங்கையில் தத்தளிக்கும் இனத்துவ உறவுகளைச் சித்திரிக்கும் இந்தத் திரைப்படம் சர்வதேசப் பரப்பில் மிகுந்த கவனத்தைப் பெற்று மதிப்புக்குரிய விருதுகளையும் வென்றிருக்கிறது.
|
இப் படத்தில் இந்திய நடிகை அம்ரிதா பட்டீல் மற்றும் இலங்கையைச் சேர்ந்த நடிகர் சியாம் பெர்ணான்டோ ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தனர். நடிகை அம்ரிதா பட்டீல் தமிழ் யுவதியாகவும், சியாம் பெர்ணான்டோ இளைப்பாறிய இராணுவ வீரராகவும் சித்தரிக்கப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்வதாக கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன .
இலங்கை அரச படைப்பிரிவில் பணியாற்றும் காலத்தில் தமிழ்;ப் பெண்களை ஊர் புகுந்து பலாத்காரம் செய்ததை தனது மனைவிக்கு கூறும் கதாநாயகன் அவள் காலில் விழுந்து அழுகிற காட்சி குற்ற உணர்வின் அதியுச்சமென்று தான் சொல்லத் தோன்றுகிறது.
மலையகத்தில் இடம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத்து தமிழ்ப் பெண்ணை காதல் கொண்டு திருமணம் செய்யும் கதாநாயகன் இராணுவப் படையில் இருந்து தான் விலகியதை மனைவியிடம் மறைத்து வருகின்ற போது விடுமுறையில் வந்த காமினி எனும் இராணுவப் படை நண்பனால் அவளுக்கு தெரிய வருவதும் தான் கதையின் மையம்.
இலங்கை இரானுவத்தால் பாதிக்கப்பட்டு தனது இரு சகோதரர்களை இராணுவமே கொலை செய்ததை கண்ணுற்ற எந்த பெண்ணால் தான் தனது கணவன் அதே இராணுவம் என்று தெரிந்த பின்னும் வாழ முடியும் ? இவ்வாறு நாளும் கொதித்தும் அழுதும் அவன் ஒopத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து அவனையே சுட முயலும் அவளை பார்கும் போது யுத்தத்தின் கொடுர தாக்கத்தை வெளிப்படுத்த முயலும் அப்பாவி பொது மக்களையும் கொலைகாரனாக்கவும் பழிவாங்கவும் தூண்டும் செயலைக் காணமுடிந்தது.. தனது இரு சகோதரர்களை கொன்றவர்கள் நீங்கள் தான் என கோபத்தோடு தகிக்கும் அவளை நோக்கி உன் தம்பிமார்கள் புலிகள் அது தான் கொன்றிருப்பார்கள்.
எனக்கு அது தொழில் என்று சொல்லும் கதாநாயகனுக்கு இல்லை இல்லை என் தம்பி மார்கள் பாடசாலை சென்ற சிறுவர்கள் என அவள் கண்களில் அவலம் நிறைய சொல்வது படம் பார்த்த அனைவரது உள்ளத்தையும் உறுக்கியது.பிரசன்ன விதானகேவின் With You With Out You திரைப்படம் என்பது யுத்தத்தின் கொடுரத்தையும் பயங்கர விளைவுகளையும் அதன் தாக்கத்தையும் உணர்ந்த சிங்கள சமூகத்தின் சொற்ப மனிதர்களின் ஆதரவுக் குரலாகவோ படு கொலைகளையும் கற்பழிப்புக்களையும் ஒத்துக்கொள்ளும் வாக்குமூலமாகவோ, ஏன் தமிழ் சமூகத்தின் நெடிய நீண்ட கால உளவியலில் இலங்கை இராணுவம் ஏற்படுத்தியிருக்கும் கொடூரத்தையும் சுட்டிக்காட்டுவதாகவே உணரமுடிகிறது.
நாம் இத் திரைப்படைத்தை பாதிக்கப்பட்ட எம் தாயகத்தில் வாழும் பொதுமக்களின் பின்னனியில் நோக்க முற்படுவோமாயின். யுத்தம் முடிவடைந்து 5 வருட முடிவிலும் நாம் இந்த யுத்தத்தின் தாக்கத்தினையும் யுத்தத்தின் வடுக்களையும் இவ்வாறன திரைப்படங்கள் மூலமாக வெளிக்கொண்டு வரும் போது யுத்தத்தின் கொடூர தாக்கத்துக்கு உள்ளாகி தற்போதும் தாயகத்தில் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் எம் சகோதர உறவுகளை மீண்டும் மீண்டும் அந்த பழைய நினைவுகளுக்கு அழைத்துச்செல்வதாய்தான் இத்திரைபடத்தின் விளைவுகளை நாம் நோக்க முடியும்.
எஞ்சியிருக்கும் எமது உறவுகளுடைய உளறீதியான உண்ணதத்தை கருதி நாம் அவர்களுடைய உடைந்து போன உள்ளங்களை கட்டியெழுப்புவதற்கான திரைப்படங்கiயும் பாடல்களையும் எதிர்காலத்தில் உருவாக்க முன் வர வேண்டும்.

No comments:
Post a Comment