வெளிநாட்டு அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுகிறது – டயான் ஜெயதிலக (Published in http://dailyceylon.com/?p=8661)
காஸாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை சகல தொடர்புகளையும் கைவிட வேண்டுமென்று இலங்கை பாலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
இந்த அமைப்பு கொழும்பில் நேற்று நடத்திய கூட்டத்திலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இலங்கை ஜனாதிபதி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான கொள்கையைக் கடைப்பிடித்தாலும், இலங்கை அரசாங்கத்தின் அங்கமான வெளிநாட்டு அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு சார்பாக செயல்படுவதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐநாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி டயான் ஜெயதிலக குற்றஞ்சாட்டினார்.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடகிழக்கில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பாதுகாப்பு குழு இஸ்ரேலிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டிருந்தன என்றும், இதனால்தான் வெளிநாடுகளில் தமிழ் பிரிவினைவாதிகள் பலமடைந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் .
இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துவரும் வன்முறையின் பின்னணியில் இஸ்ரேலின் ஆதரவைப் பெற்ற குழுக்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார் .
இதேவேளை கொழும்பில் 4 இஸ்ரேவேலிய நிலையங்கள் இயங்குவதாகவும், இதுவரை 1000க்கும் மேற்பட்ட சிங்கள பெண்கள் இந் நிலையங்கள் ஊடாக விசா பெற்று அங்கு பணிப்பெண்களாக தொழில் பெற்றுச்சென்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், 25000க்கும் மேற்பட்ட சிங்கள ஆண்கள் இஸ்ரேலில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் சிஹல உறுமய கட்சியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இஸ்ரேவேல் நாட்டுக்குச் சென்று வந்ததாகவும் தெரிவித்த முன்னாள் பிரதிநிதி டயான் ஜெயதிலக, இஸ்ரேவேல் நாட்டுடன் கொண்டுள்ள தொடர்புகளை ஜனாதிபதி நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோரினார்.
முனனாள் அமைச்சர் இமதியாஸ் பாக்கீர் மாக்கார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை பலஸ்தீன் அமைப்பின் தலைவர்கள், சிரேஸ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்தின, பலஸ்தீன தூதுவர் சுகையிர் அப்துல்லா, ஆகியோறும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். (ஸ)
தகவல் உதவி – அஷ்ரப் ஏ சமத்
No comments:
Post a Comment