எதிர்தரப்புகள் ஒன்றிணைந்த தேசிய கூட்டணி அமையுமாயின் ஆட்சி மாற்றம் நிச்சயம்; தேர்தல் முடிவு உரத்துச் சொல்லும் செய்தி இதுவே!
1993ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் இலங்கையின் தேர்தல் வரலற்றில் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட ஒரு தேர்தல். அந்த தேர்தல் சொன்ன செய்தியும், இன்றைய தேர்தல் பெறுபேறும் ஒரே செய்தியை தாங்கிய திசையை நோக்கி நகர்வதை அவதானிக்க முடிகிறது. தேர்தலில் வாக்களித்தவர்களால் ஆளும் கட்சி வெற்றி பெற்றாலும் எதிர் கட்சிகளின் மேல் மக்கள் கொண்டுள்ள புதிய வித்தியாசமான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு, வாக்களிக்க ஆர்மில்லாத அதிக தொகையான அரசுக்கு எதிரானவர்கள் என்பனவற்றை ஒரு புதுக் கோணத்திலிருந்து கணக்குப் போடும் போது கிடைக்கும் விடையானது நடைமுறை அரசுக்கு பிரியாவிடை கிடைத்து விடும் எனற ஒரு தகவலைச் சொல்கிறது.
இருந்தாலும் இன்றைய UNP என்கிற பிரதான எதிர்கட்சியால் அல்லது அதன் இன்றைய போக்கினால் இதனை செய்ய முடியாது என்பதையும் இதே பெறுபேறு கோடிட்டுக் காட்டுகிறது.
ஒரு பொது அபேட்சகரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கிலான ஒரு புதிய தேசிய அணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற செய்தியை உரத்துச் சொல்கிறது.
ஜனநாயகப் பாரம்பரியம் மிக்க நாடொன்றின் அதிகாரமானது ஒரு சிலரின் கட்டுபாட்டுப் பொறிக்குள் தொடர்ந்து சிக்கித் தவிப்பதென்பது பாரதூரமான பல விளைவுகளை உருவாக்க வல்லது என்ற செய்தியும் இத்தேர்தல் மூலம் ஒரு சிறிய அளவில் பதிவாகியுள்ளது.
நாடளாவிய தேர்தல் ஒன்றில் இத்தகவாலானது மேலும் வழுப்பெரும் வாய்ப்புள்ளது. பல ஆளும் கட்சி அமைச்சர்கலுக்குக் கூட இந்த அதிகாரம் நடைமுறையில் பரவலாக்கப் படாமையானாது அடுத்த பொது வேட்பாளர் தேடுதலுக்கு உதவியாக அமையும் வாய்ப்பு கனிந்துள்ளது.
பல கோணங்களில் இருந்து நோக்கும் பொழுது எதிரணிகளால் இனி வரும் காலங்களில் எடுக்கப் போகும் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்மானங்களே பதில் சொல்லும்.
UNP, சரத் பொன்சேகாவின் ஜனாயகக் கட்சி, JVP, மற்றும் தமிழ், முஸ்லிம், அரசியல் சக்திகள், ஆளும் அரசின் அதிருப்தியாளர்கள் என ஒரு புதிய நல்லாட்சிக்கான சக்தியாக மாறினால் மட்டுமே ஒரு ஆட்சி மாற்றம் என்பதை நினைத்துப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment