Monday, July 14, 2014

ஒன்றிணைவோம்....Muise Wahabdeen

நம்மை முடக்கும் கரங்களுக்கு எதிராக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் எமது கரங்களை உயர்த்த வேண்டிய காலமிது....

எமது அன்றைய முஸ்லிம் தலைவர்கள் தனித்துவம் குன்றாத தேசப்பற்றையும், தேசபக்திக்கு குந்தகம் ஏற்படாத தனித்துவத்தையும் கொண்ட ஒரு பாதையில் பயணித்துக் காட்டினார்கள். நாம் பிறந்த மண்ணில் எமது தனித்துவத்தை நிலை நாட்டுவது என்பது எமது உரிமையாகும். பயம், பதவி, பணம், பலம், என்பவற்றுக்கு அப்பால் நீதிக்காக, உண்மைக்காக, உரிமைக்காக, எழுந்து நிற்பதும் போராடுவதும், எமது தலையாய கடமையாகும்.

இன்றைய நிலைமையை பொடுபோக்காக விட்டு,விட்டு, எமது சொந்தப் பிரச்சினைகளில் மூழ்கி எமக்கிருக்கின்ற சமூகக் கடமையை புறந்தள்ளி விட முடியாது. கால நேரங்களுக்கேற்ப சமயோசித தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. மியன்மாரை மாதிரியாகக் கொண்ட இலங்கையை உருவாக்கும் மாயையில் மிதக்கும் பொது பல சேனா, ராவய, சிங்ஹல உருமய, போன்ற இயக்கங்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். 

இது எமது சமூகம் சார்ந்த முக்கியமான பிரச்சினை ஆதலால் மிகவும் நுணுக்கமாகவும், நுட்பமாகவும், செயற்பாடுகளை நகர்த்த வேண்டும். தனிப்பட்ட கோபதாவங்கள், இயக்க பிரிவுகள், அரசியல் இலாப நட்டங்களை கணக்குப் பார்க்கும் நேரமல்ல. ஒரு இக்கட்டான கட்டம். இவ்வாறான ஒரு சந்தர்பத்தில் நான் எனது சமூகத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். 
எமது சமூகத்தின் துயர் நீக்க எல்லோரும் ஒரு வரிசைக்கு வர வேண்டிய தருணம் இது. இனியும் காலம் தாழ்த்த கூடாது. நம்மை முடக்கும் கரங்களுக்கு எதிராக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் எமது கரங்களை உயர்த்த வேண்டிய காலமிது

No comments:

Post a Comment