Monday, July 14, 2014

போராட்டமும் ஜனநாயகமே....Muise Wahabdeen

போராட்டங்களை எதிர்ப்பது ஜனநாயக விரோத செயலாகும்.

நேற்று லண்டனில் நடைபெற்றது ஒரு ஜனநாயகப் போராட்டம். ஐக்கிய இராட்சிய அரசாங்கத்தினால் அரசாங்கத்தின் முறையாகப் பெறப்பட்ட அனுமதியுடன் நடாத்தப்பட்ட ஒரு உரிமை போராட்டம். எவ்வாறு வாக்களிப்பது எமது உரிமையோ அதே போன்ற ஒரு ஜனநாயக உரிமைதான் இவ்வாறான போராட்டங்கள். 

ஜனநாயகப் பாரம்பரியங்களை மதிக்கும் எவருக்கும் இவ்வாறான போரட்டங்களை எதிர்க்க முடியாது. அவ்வாறு எதிர்ப்பதானது ஒரு ஜனநாயக விரோத செயலாகும்.

ஜனநாயகத்தின் ஒரு அங்கமே போராட்டங்கள். ஜனநாயாக முறைமையை பின்பற்றும் எந்த ஒரு நாட்டு சட்ட யாப்பிலும் இவ்வாறான போராட்டங்கள் தடை செய்யப்படவில்லை. தமது விருப்பத்தை தேர்தலில் வாக்குகள் மூலமும், தாம் விரும்பாத, கண்டிக்கப்பட வேண்டியவற்றை சம்பத்தப்பட்ட தரப்ப்பின் கவனத்துக்கு கொண்டு செல்லும் ஒரு ஜனநாயாக வழி முறையே இவ்வாறான போராட்டங்கள். 

ஒரு ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமையை மறுப்பதோ, வாக்களிப்பதை தடுப்பதோ, வாக்களிக்க கூடாது என்று பிரச்சாரம் செய்தோ சட்டப்படி குற்றமாகும். அதே போன்ற ஒரு செயற்பாடுதான் இவ்வாறான போரட்டங்களை தடை செய்ய முயற்சிப்பதும். 

ஒரு குழந்தை தனது பசியை அழுகை மூலம் சொல்லுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தனது முறைப்பாட்டை ஒருமித்த குரலாக அரசாங்கத்திடம் முன்வைக்கும் ஒரு முறையே வெகுஜனப் போராட்டங்கள்.

No comments:

Post a Comment