Monday, July 14, 2014

காசாவும் தலைவர்களும்....Rasoolsha M.Sharoofi.

காசாவில் இஸ்ரேல் நடாத்தும் அராஜகங்களைக் கண்டு உலகமே கொதித்தாலும், பதில் தாக்குதல் நடத்தும் முஸ்லிம்களை மட்டும் பயங்கரவாதிகளாகவும், ஆபத்தானவர்களாகவும் சித்தரிப்பதில் அமெரிக்காவும், பிரிட்டனும் அன்று முதல் இன்று வரை போட்டி போட்டுக் கொள்கின்றன.

காரணம், 1948 இல் தாங்கள் வழங்கிய அநீதியான தீர்ப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்காக சர்வதேசத்தை யூத அனுதாபிகளாக மாற்றும் முயற்சி  தவிர, இது வேறில்லை.

இதைப் புரிந்துகொள்வதற்கு 'பாலஸ்தீனத்தில் யூதர்கள்' (Jewish in Palestine ) என்ற தலைப்பில் 1938 இல் தனது 'ஹரிஜன்' என்ற பத்திரிகையில் காந்தி எழுதிய கட்டுரை மிக முக்கிய ஆவணமாகப் பார்க்கப் படுகின்றது. அவற்றின் சில முக்கிய பகுதிகளை இனி பார்க்கலாம்.


« பலஸ்தீனத்தில் அரபு-யூத பிரச்சனைப் பற்றிய எனது கருத்தைக் கேட்டு ஒரு சில கடிதங்கள் எனக்குக் கிடைத்தன. ஜெர்மனியில் நிகழ்த்தப்பட்ட யூத இனப் படுகொலைகள் பற்றியும் கேட்கிறார்கள்.

மிகவும் சிக்கலான இந்தப் பிரச்சனைப் பற்றிய எனது கருத்தை எந்த வித தயக்கமும் இல்லாமல் இங்கே குறிப்பிடுகின்றேன்.


யூதர்களுக்காக அனுதாபப் படுகிறேன். நான் தென்னாபிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் அவர்களை நெருக்கமாக அறிவேன். சில யூத நண்பர்கள் கூட எனக்கு இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் யூதர்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகள் பற்றி அறிந்திருக்கின்றேன். நீதி என்ற தேவை ஏற்படும்போது இந்த அனுதாபங்கள் எல்லாம் என் கண்களை மறைக்கப் போவதில்லை.


என்னைப் பொறுத்தவரையும் யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி நாடு கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களுடைய வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே யூதர்கள் பலஸ்தீனத்தை நோக்கி திரும்புகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


உலகில் ஏனையவர்கள் சொல்வதைப் போல, எங்கே அவர்கள் பிறந்து வளர்ந்தார்களோ அதனையே ஏன் தங்கள்  சொந்த நாடாக ஏற்றுக் கொள்ள முடியாது?


இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கு சொந்தமோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்கார்களுக்கு  சொந்தமோ அது போல பாலஸ்தீன் அரபுகளுக்கு சொந்தமானது. பிற நாடுகளில் வசிக்கும் யூதர்களைக்  கொண்டு வந்து அங்கே குடியேற்றுவது மனிதாபிமானமற்ற செயலாகும்.

பலஸ்தீனில் இன்று நடந்துகொண்டிருப்பது நியாயப்படுத்தவே முடியாத செயலாகும். இங்கிலாந்து அங்கே செய்து கொண்டிருப்பது மனிதகுலத்துக்கு எதிரான செயலாகும். தமெக்கென்று தனிநாடு கேட்கும் 
யூதர்கள் தற்சமயம் வசிக்கும் நாடுகளை ஒட்டுமொத்தமாக விட்டு வரப்போவதில்லை.

அப்படி வந்தாலும் இங்கே ஒரு நாடு, அங்கே ஒரு நாடு என்ற இரட்டை நிலயிலேயே இருப்பார்கள். நான் ஒரு யூதனாக இருந்து, ஜெர்மனியில் பிறந்திருந்தால், ஜெர்மனிதான் என் தாய் நாடு என்று நினைப்பேன். அங்கே என்ன கொடுமை நடந்தாலும் எனது  சொந்த நாட்டில் அது நடப்பதாக எடுத்துக் கொள்வேனே தவிர, பிற நாட்டை என் தாய்நாடாக நினைத்து  ஓடிவிடமாட்டேன்.


சந்தேகமில்லாமல் சொல்கிறேன் யூதர்கள் தவறான பாதையிலேயே  போய்க்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வேதத்தில் குறிப்பிடப்படும் பாலஸ்தீன் என்பது இன்றைய புவியியல் எல்லைகளுக்குள் தேடப்படவேண்டிய நிலப்பரப்பு அல்ல, மாறாக அவர்கள் இதயங்களுக்குள்ளே இருக்கவேண்டியது. அப்படியே அது அவர்களின் தாயகப்பிரதேசம் என்றாலும், இங்கிலாந்து ராணுவத்தின் துப்பாக்கி நிழலின் கீழ் திருட்டுத்தனமாக ஒரு தேசத்தை அடைய விரும்புவது  ஏற்றுக்கொள்ள முடியாதது.


பலஸ்தீனில் யூதர்கள் வாழ விரும்பினால், அரபுகளின் அனுமதியுடன் அவர்கள் வாழலாம். அதற்கு முதலில் அரபுகளின்  உள்ளங்களை யூதர்கள் வெல்லட்டும். »

முக்கியமான பகுதிகள் மட்டும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மேலதிகத் தகவல்களுக்காக ஆங்கில மூலத்தை இதனுடன் இணைக்கிறேன்.

Mahatma Gandhi on ! Palestine written in 1938

The Jews In Palestine

By Mahatma Gandhi

Published in the Harijan
26-11-1938.

Several letters have been received by me, asking me to declare my views
about the Arab-Jew question in Palestine and the persecution of the Jews in
Germany. It is not without hesitation that I venture to offer my views on
this very difficult question.

My sympathies are all with the Jews. I have known them intimately in South
Africa. Some of them became lifelong companions. Through these friends I
came to learn much of their age long persecution. They have been the
untouchables of Christianity. The parallel between their treatment by
Christians and the treatment of untouchables by Hindus is very close.

Religious sanction has been invoked in both cases for the justification of
the inhuman treatment meted out to them. Apart from the friendships,
therefore, there is the more common universal reason for my sympathy for
the Jews. But my sympathy does not blind me to the requirements of justice.

The cry for the national home for the Jews does not make much appeal to me.
The sanction for it is sought in the Bible and the tenacity with which the Jews
have hankered after return to Palestine.


Why should they not, like other peoples of the earth, make that country
their home where they are born and where they earn their livelihood?
Palestine belongs to the Arabs in the same sense that England belongs to the English or France to the French. It is wrong and inhuman to impose the Jews on the Arabs. What is going on in Palestine today cannot be justified by any moral code of conduct. The mandates have no sanction but that of the last war. Surely it would be a crime against humanity to reduce the proud Arabs so that Palestine can be restored to the Jews partly or wholly as their
national home. The nobler course would be to insist on a just treatment of
the Jews wherever they are born and bred. The Jews born in France are French in precisely the same sense that Christians born in France are French.

If the Jews have no home but Palestine, will they relish the idea of being
forced to leave the other parts of the world in which they are settled?
Or do they want a double home where they can remain at will? This cry for the
national home affords a colorable justification for the German expulsion of
the Jews. But the German persecution of the Jews seems to have no parallel
in history. The tyrants of old never went so mad as Hitler seems to have
gone. And he is doing it with religious zeal. For, he is propounding a new
religion of exclusive and militant nationalism in the name of which any
inhumanity becomes an act of humanity to be rewarded here and hereafter.

The crime of an obviously mad but intrepid youth is being visited upon his
wholerace with unbelievable ferocity. If there ever could be a justifiable
war in the name of and for humanity, a war against Germany to prevent the
wanton persecution of a whole race, would be completely justified. But I do
not believe in any war. A discussion of the pros and cons of such a war is,
therefore, outside my horizon or province.

But if there can be no war against Germany, even for such a crime as is
being committed against the Jews, surely there can be no alliance with
Germany. How can there be alliance between a nation, which claims to stand
for justice and democracy and one, which is the declared enemy of both? Or
is England drifting towards armed dictatorship and all it means?

Germany is showing to the world how efficiently violence can be worked when
it is not hampered by any hypocrisy or weakness masquerading as humanitarianism.It is also showing how hideous, terrible and terrifying it looks in its nakedness.Can the Jews resist this organized and shameless persecution? Is there a way to preserve their self-respect, and not to feel helpless, neglected and forlorn? I submit there is. No person who has faith in a living God need feel helpless or forlorn. Jehovah of the Jews is a God more personal than the God of the Christians, the Mussalmans or the Hindus, though as a matter of fact, in essence, He is common to all and one without a second and beyond description. But as the Jews attribute personality to God and believe that He rules every action of theirs, they ought not to feel helpless.

If I were a Jew and were born in Germany and earned my livelihood there, I
would claim Germany as my home even as the tallest gentile German might, and challenge him to shoot me or cast me in the dungeon; I would refuse to be expelled or to submit to discriminating treatment. And for doing this I
should not wait for! the fellow Jews to join me in civil resistance, but
would have confidence that in the end the rest were bound to follow my
example.... ...

And now a word to the Jews in Palestine. I have no doubt that they are going
about it in the wrong way. The Palestine of the Biblical conception is not a
geographical tract. It is in their hearts. But if they must look to the
Palestine of geography as their national home, it is wrong to enter it under
the shadow of the British gun. A religious act cannot be performed with the
aid of the bayonet or the bomb. They can settle in Palestine only by the
goodwill of the Arabs. They should seek to convert the Arab heart.

The same God rules the Arab heart who rules the Jewish heart... They will
find the world opinion in their favor in their religious aspiration. There are
hundreds of ways of reasoning with the Arabs, if they will only discard the
help of the British bayonet. As it is, they are co-sharers with the
British in despoiling a people who have done no wrong to them. I am not
defending the Arab excesses. I wish they had chosen the way of non-violence
in resisting what they rightly regarded as an unwarrantable encroachment
upon their country. But according to the accepted canons of right and wrong,
nothing can be said against the Arab resistance in the face of
overwhelming odds.

Let the Jews who claim to be the chosen race prove their title by choosing
the way of non-violence for vindicating their position on earth. Every
country is their home, including Palestine, not by aggression but by loving
service. A Jewish friend has sent me a book called The Jewish Contribution
to Civilization by Cecil Roth. It gives a record of what the Jews have done
to enrich the world's literature, art, music, drama, science, medicine,
agriculture, etc. Given the will, the Jew can refuse to be treated as the
outcast of the West, to be despised or patronized. He can command the
attention and respect of the world by being the chosen creation of God,
instead of sinking to the brute who is forsaken by God. They can add to
their many contributions the surpassing contribution of non-violent action.

http://www.countercurrents.org/pa-gandhi170903.htm

No comments:

Post a Comment