Wednesday, July 16, 2014

நிலையான தர்மம் தந்த சாபம் U.H. Hyder Ali

எமது நாட்டில் வாழும் பெரும்பான்மை இனமும் ஏனைய சிறுபான்மை இனங்களும் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை பற்றி தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு இந்த நாட்டில் ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழும் முஸ்லிம்கள் விட்ட தவறுதான் என்ன ?

ஏன் எம்மைப்பற்றி இந்த தப்பபிப்பிராயங்களும் எமக் எதிரான காழ்ப்புணர்ச்சிகளும்?. தற்போது இலங்கையில் சிங்கள பெரும்பான்மை இனமும் முஸ்லீம்களும் ஏனைய சிறுபான்மை இனங்களும் ஆண்டாண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்த இந்த சமூகங்கள் இன்று ஏன் முஸ்லிம்களாகிய எம்மைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு எமக்கு ஏதிரகா செயற்படுகின்றார்கள். நாம் விட்ட தவறு தான் என்ன? ஏன் எம்மைபற்றி தவறாக எண்னுகின்றார்கள் ? என்ற கேள்விகளுக்கு இலங்கையில் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள், இயக்கங்கள், சர்வதேச மற்றும் உள் நாட்டு முஸ்லிம் அரச சார்பற்ற அமைப்புக்கள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் புத்தி ஜீவிகள் போன்ற அனைத்துத் தரப்பினரும் ஒன்றினைந்து இதற்கான விடைகாண முயற்சிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது !

 இன்று இலங்கையில் எழுந்துள்ள முஸ்லிம் எதிர்ப்பு அலைக்கு முஸ்லிம்களாகிய எம் மத்தியில் முதலில் விடை காண முயற்சித்தால் மிகச் சாலச்சிறந்ததாகும். முஸ்லிம்களாகிய நாம் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை சமூகம் உட்பட ஏனைய சமூகங்களது உணர்வுகளை மதிக்கக் கூடியவர்களாக நாம் வாழ்ந்துள்ளோமா ? அல்லது அவர்களது உணர்வுகள் உள்ளங்கள் புன்பட நாம் நடந்துள்ளோமா ? இவ்வினாக்களை எம் மத்தியில் கேட்டு விடைகான முயற்சிப்போமேயானால்… தற்போழுது இந்த நாட்டில் எழுந்துள்ள இஸ்லாம் எதிர்பு அலைக்கு தீர்வு காணமுடியும்.

அது அல்லாது பிரச்சினை எங்கோ இருக்க நாம் எதனைப்பற்றியோ பேசிக்கொண்டிருக்கிறோம். பௌத்த மதகுருமார்களுக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும், பௌத்த சிங்கள சகோதரர்களுக்கும் ரமழான் மாதத்தில் பள்ளி வாயில்களில் இப்தார் ஏற்பாடு செய்வதனால் மாத்திரம் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. இந்த நாட்டின் வரலாற்றுப் பின்னனியை நோக்கினால் சிங்கள பௌத்த சமூகம் காலத்துக்கு காலம் முஸ்லிம்களோடு கருத்து முரன்பாடுபட்டு முருகல் நிலைகளை ஏற்படுத்திக்கொண்டாழும் பின்பு பெரும்பான்மையான சிங்கள பௌத்த சமூகமும் முஸ்லிம்களாகிய எம்மோடு ஓன்றினைந்து செயற்படுகின்றார்கள்.

 இந்த நாட்டில் அரபு நாடுகிளின் உதவியுடன் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இஸ்லாமிய இயக்கங்களும் இலங்கையில் இன்று ஏற்பட்டிருக்கும் இந்த இஸ்லாம் எதிர்பு அலைக்கு இவர்களும் பொறுப்பாளிகள். இந்த நிறுவனங்கள் தெருவுக்கொரு பள்ளி ஓவ்வொரு இயக்கததுக்குச் சார்பான பள்ளி என்று அரேபியரின் நிலையான தர்மத்திற்காக இந்த நாட்டில் அறபு றியால்களை அள்ளி இறைக்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்து பெரும் பான்மையினர் மத்தியில் எம்மைப்பற்றி தப்அபிப்ராயங்கள் ஆரம்பிக்கத் தொடங்கியது.

 நாம் இந்த நாட்டிள் உள்ள சட்ட திட்டங்களை அவமதித்து மார்க்கப்பாடசாலைளுக்கு வழங்கிய சட்டங்களை பயன்படுத்தி அறபு றியால்கலால் மார்க்கப் பாடசாலை என்ற பெயரில் பள்ளிகள் கட்ட முற்பட்டதனால் எமைக்கண்டு பெரும்பான்மை சமூகங்கள் அஞ்சத் தொடங்கின. இந்த இயக்கங்கள் இலங்கையர்களாகிய எம்மை சோமாலியர்களாக எண்ணி எப்பொழுது அரேபிய உளுகியாவை இங்கு கொண்டுவந்து கொடுக்க ஆரம்பித்தார்களோ அன்றில் இருந்து எம்மைப்பற்றி தப் அபிபராயங்கள் ஆரம்பிக்கத் தொடங்கியது. இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் மாடு அறுப்பதை பெரும் பாவமாக கருதுகிறது, நாம் இவ்விடத்தில் அவர்களது உணர்வுகளை மதிக்காது எமக்கு மாட்டிறைச்சி சாப்பிடுவது கட்டாய மார்ககக்கடமையப்போல என்னி மாடு அறுப்பதையும் சாப்பிடுவதையும் தவராமல் செய்து வருகிறோம்.

 அது மாத்திரமள்ளாது அரேபியரின் உளுகியாவிற்காக எமது நாட்டில் சமூகங்களுக்கு மத்தியில் வீணான தப்பபிப்ராயங்களை உருவாக்கிக் கொண்டோம். இந்த தப்பபிப்பிராயங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய அமைப்புக்களும் இயக்கங்களும் தத்தமது நிறுவனத்திற்கான வெப்சைட்களை ஆரம்பித்து இவர்களது திட்டங்களை அதில் பிறசுரிக்கவும் செய்தது.

எத்தனை பள்ளிவாயில்கள் கட்டினார்கள், எத்தனை மாடு உளுகியா கொடுத்தார்கள், எத்தனை கிணறு கட்டினார்கள் என்று முழு விபரத்தையும் அந்த வெப்சைட்களில் பிரசுரித்து தத்தமது இயக்கங்களை விளம்பரப்படுத்த முற்பட்டதனால் ஏனைய சமூகத்தவர்கள் இவற்றைக் கண்டு இந்த நாடு இஸ்லாமிய மதப்படுத்தளுக்கு உட்படுவதாக எண்ணி அஞ்சத் தொடங்கினர். இதன் அடிப்படையில் தான் பெரும்பான்மை சமூகத்திற்கும் எமக்கும் விரிசல்கள் ஆரம்பிக்கத் தொடங்கின..

இந்த விரிசல்கள் தொடர்ந்தால் இன்னுமொரு பர்மாவை இந்த நாட்டில் நாம் கூடிய விரைவில் கண்டு விடுவோம், எனவே இந்த நாட்டில் அரபு நாடுகிளின் உதவியுடன் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் இஸ்லாமிய இயக்கங்களிடமும்  நாம் கேட்டுக்கொள்வது யாதெனில் தயவு செய்து தொடர்ந்தும் இந்த பள்ளி கட்டும் வேலைகளையும் அரபிகளது உளுகியாவை இங்கு கொண்டுவந்து கொடுப்பதையும் உடநடியாக நிறுத்தி விடுங்கள். உங்களது வெப்சைட்டுக்களிள் உள்ள உளுகியா கொடுக்கும் மற்றும் பள்ளிகட்டிய புகைப்படங்களையும் வீடியோ கிளிப்களையும் அறிக்கைகளையும் உடனடியாக அகற்றிவிட வேண்டும்.

அரபு நாடுகளை மையமாவைத்து இயங்கும் இஸ்லாமிய இயக்கங்ளிடமும் முஸ்லிம் அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் அரபு நாடுகளின் தூதுவராலயங்களிடம் இஸ்லாமிய இயக்கங்களிடமும் நாம் விடுக்கும் வேண்டுகோள் பள்ளிகட்டுவதற்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு எமது நன்றிகள். இதற்கு பிறகு பள்ளிகள் எமக்கு போதும் உங்களால் முடிந்தால் எமது முஸ்லிம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய உதவுங்கள் அல்லது எமக்கு உங்களது உதவிகள் எமக்கு போதும் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களது உளுகியாக்கள் எமக்கு போதும் இவற்றை சோமாலியாவுக்கு அல்லது ஆபிரிக்காவுக்கு அனுப்புங்கள். உங்களால் முடிந்தால் எமது நாட்டுக்கு என்ன தேவை எமது தேவைகளுக்கு ஏற்ப உள்நாட்டு திட்டங்களுக்கு தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுத்துங்கள் அல்லது அதனை விட்டுவிட்டு அரபு நாட்டு செயற் திட்டங்களை இங்கு நடை முறைப்படுத்த முற்பட வேண்டாம்.

இலங்கையரின் வறுமையும் அரேபியரின் கொடுமையும் அரபு நாட்டு தூதுவராளயங்களது கவனத்திற்காக எமது நாட்டின் பெண்கள் அரபு நாடுகளில் வீட்டுப் பணிப் பெண்களாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உங்களுக்காக தங்களது குடும்பத்தை பிரிந்து, சிறு குழந்தைகளை பிரிந்துஇ தனது உடலை வருத்தி தனது குடும்ப வறுமைக்காக அங்கு வேலை பார்க்கிறார்கள்.

இந்த ஏழைப் பெண்களுக்கு அங்கு நீங்கள் செய்யும் அநீதிகளும் கொடுமைகளும் இன்நோரன்ன, எத்தனை எத்தனை ஆரியவதிகளும் ஏத்தனை றிஸானாக்களும் படும் துன்பம் இவற்றை கண்டு முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்கள் இஸ்லாத்தை ஒரு பயங்கர கொடுர மார்க்கமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

அது மட்டுமல்லாது, இந்த அரபிகளது மிருகத்தனமாக ஈனச் செயல்களைக் கண்டு இந்த நாட்டில் ஆயிரம் வருடத்துக்கு மேலாக வாழ்ந்த சமூகங்கள் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், இன்று இலங்கையில் ஆரம்பித்துள்ள இஸ்லாம் ஏதிர்பு அலைகளுக்கு நிச்சியமாக நீங்களும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

No comments:

Post a Comment