புனித ரமழானில் நோன்பு நோற்று ஒரு பக்குவப்பட்ட நிலையில் இருக்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் தம்மை சமூக சிந்தனையில் ஈடுபடுத்துவோம்...
இன்று உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான், ஈராக் முதல் பலஸ்தீன் வரை பல அரபு, முஸ்லிம் நாடுகள் கடந்த பல வருடங்களாக அந்நியரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அந்நாடுகளில் அக்கிரமங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
குறிப்பாக முஸ்லிம்களின் பலத்தை அழித்தொழிக்கும் திட்டத்துடன் ஏகாதிபத்திய சக்திகள் பல சதிகளை அரங்கேற்றி வருகின்றன. அதேவேளை முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற பல நாடுகளில் முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.
மியன்மாரில் நமது சகோதர முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு வருவதும் இலங்கையில் கோத்தாவின் அனுசரனையுடன் அரங்கேறும் ஞானசார தேரரின் வெறியாட்டங்கள் மேற்கொள்ளப்படுவதும் இதன் பின்னணியில்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகையினால் புனித ரமழானில் நோன்பு நோற்று ஒரு பக்குவப்பட்ட நிலையில் இருக்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் தம்மை சமூக சிந்தனையில் ஈடுபடுத்தி உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நிம்மதியான வாழ்வுக்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் சமூகம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதற்கும் இப்புனித ரமழானில் திடசங்கற்பம் பூணுவோம்!
No comments:
Post a Comment