உலகில் தோன்றிய மிகவும் கொடூரமான மனிதர்களுள் ஒருவர் என்று சித்தரிக்கப்படும் 'அசின் விராத்து' இலங்கை வந்தார் என்ற செய்தியைக் கேட்டபோது, சமீபத்தில் சுகுணா திவாகர் 'குழந்தைகளைக் கொல்வது எளிது' என்ற தலைப்பில் பல குட்டிக் கதைகளை இணைத்து ஒரு கதை எழுதியிருந்தார். அதில் வரும் ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது. நாட்டு நடப்புக்கு பொருத்தமான கதை என்பதால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
"புத்தர் மீண்டும் மறு பிறப்பு எடுத்திருந்தார்! ஆண்டுக்கணக்கில் தியானத்தில் இருந்தவரைப்போல கண்களைத் திறந்தார் புத்தர். அது ஒரு பூ மலர்வதைப் போல இருந்தது. தன்னிச்சையாக அவரது உதடுகள் 'உனக்கு நீயே ஒளி' என்று முணுமுணுத்தன.
தூரத்தில் பிரகாசமான நெருப்புப் பந்து ஒன்று மீண்டும் மீண்டும் தோன்றி மறைந்தது. கூடவே துப்பாக்கிகளின் ஓசைகள் அடங்கி அடங்கி எழுந்தன. விடாமல் குடு வீச்சுக்களின் ஓசைகளும் கேட்டுக் கொண்டிருந்தன. புத்தர் குழப்பத்துடன் நடக்க ஆரம்பித்தார்.
கால்களை இடரின ஆயிரக் கணக்கான பிணங்கள். சித்தார்த்தனாக இருந்தபோது அவர் கண்ட சவ ஊர்வலம் நினைவுக்கு வந்தது. சுற்றிலும் ஒருமுறை பார்வையை ஓடவிட்டார். வெடி மருந்துகளின் கரித்துகள்கள் சிதறிக் கிடந்தன. அ ரச மர இலைகளால் கரித் துகள்களைக் கூட்டிச் சேகரித்தார். அந்தக் கரித்துகள்களைக் கொண்டு 23 கோடியே 67 லட்சத்து 58 ஆயிரத்து 364 பென்சில்களைச் செய்து முடித்தார். கைகளில் பென்சில்களுடன் குழந்தைகளைத் தேடி நடக்கத் தொடங்கினார் புத்தர்!"
மியன்மாரில் நடந்த இன சுத்திகரிப்பில், எந்தப் பாவமும் அறியா நூற்றுக் கணக்கான பிஞ்சுக் குழந்தைகளை துடிக்க துடிக்க நெருப்பில் வதக்கிய காட்சிகளை மனிதர்களாகப் பிறந்த எவரும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்! இந்த படுகொலைகளின் சூத்திரதாரி 'அசின் விராத்து' என்பது வெளிப்படையான உண்மை. 2013, ஜூன் மாத THE TIMES இதழ் கூட இவர் முகத்தை அட்டைப் படத்தில் பிரசுரித்து 'The Face of Buddhist Terror' என தலைப்புப் போட்டிருந்தது உலகறிந்த உண்மை. அன்பு, கருணை, மனிதம் என உயரிய மனித விழுமியங்களை போதித்த பெளத்த சித்தாந்தத்துக்குள் மிரட்டல், கொலை, காட்டுமிராண்டித்தனம், பெளத்த தேசியம் போன்றவற்றை புகுத்திய 'அசின் விராத்து' போன்றவர்களை உலகம் அத்தனை இலகுவில் மறந்துவிடாது.
இவ்வாறன பின் புலம் கொண்ட ஒருவரை தங்களுக்கு நெருக்கமானவர் என்று BBS நட்புப் பாராட்டிக் கொளவது எதை அடைந்து கொள்வதற்காக? தீவிரவாதமற்ற அமைதியான ஓர் உலகை உருவாக்குவதற்காகவா?
photo-(https://www.tumblr.com/search/muslim+genocide)
No comments:
Post a Comment