மாத்தறை இஸ்ஸதீன் நகருக்கு பள்ளிவாசல் ஆகாதாம்
Hisham Hussain, Puttalam
மாத்தறை (தென் மாகாணம்) நகரைச் சேர்ந்த FASY AJWARD அவர்களினால் Islam In Sinhala எனும் முகநூல் பக்கத்தில் (facebook page) சிங்கள மொழியில் எழுதப்பட்ட கட்டுரை. மேற்படி Islam In Sinhala பக்கம் சிங்கள மொழிமூலம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும், இஸ்லாம் முஸ்லிம்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும், பிழையான கருத்துக்களுக்கு எதிராக வாதாடும் முகநூல் பக்கங்களில் ஒன்றாகும்.
மாத்தறை ‘இஸ்ஸதீன் நகரம்’
இஸ்ஸதீன் நகரம் தனியொரு மனிதனின் காணியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு. இஸ்ஸதீன் என்பவர் தனக்குச் சொந்தமான 85 ஏக்கர் காணியில் அழகானதொரு நகரத்தைத் திட்டமிட்டார். அதில் மக்கள் வீடுகளைக் கட்டிக்கொண்டு வாழுவதற்காக காணித் துண்டுகளை வழங்கினார். முஸ்லிம், சிங்களம் என இனவாதம் பாராமல் எவரும் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு வசதிகளையும் செய்திருந்தார். அவரது விருப்பம் போலவே அன்று முதல் இன்று வரை சிங்கள, முஸ்லிம் குடும்பங்கள் பேதம் என்ற சொல்லைக் கூட அறியாதவர்களாக ஒற்றுமையாக வாழுகின்றனர்.
எனினும் இஸ்ஸதீன் அவர்கள் முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் நிருமாணிப்பதற்கு என ஓர் இடத்தை ஒதுக்காமல், அதனை விட பரந்த நோக்கில் முஸ்லிம்களுக்கான சன சமூக நிலையமொன்றுக்காக என இடமொன்றை ஒதுக்கியிருந்தார். அச் சன சமூக நிலையத்திற்கு செல்லும் பாதையின் பெயர் ‘மஸ்ஜித் வீதி’ என நில அளவை வரைப் படத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று அந்த வீதி ‘கொதலாவலை வீதி’ என மாற்றப்பட்டு உள்ளது.
ஆரம்பக் காலங்களில் இக் குடியிருப்பில் பள்ளிவாசல் ஒன்று இல்லாததால் முஸ்லிம்கள் குடியிருப்பதற்கு நாட்டம் காட்டவில்லை. எனினும் முஸ்லிம்களின் ஜனாஸா (பிரேத) நல்லடக்கத்திற்காக காணித் துண்டு ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அம் மையவாடியில் இரண்டு முஸ்லிம்களின் பிரேதங்கள் அடக்கம் செய்யப்பட்டும் இருந்தன. தூரதிருஷ்டவசமாக அந்தக் காணித் துண்டிலும் சிலர் அத்துமீறி வீடுகளைக் கட்டிக்கொண்டனர்.
எவ்வாறாயினும் இஸ்ஸதீன் அவர்கள் குணானந்த நாயக்கத் தேரரை (பிரதான பௌத்த பிக்கு) இக் குடியிருப்புக்கு அழைத்து வந்து அவருக்கு ஒரு பன்சாலையும் நிருமாணித்துக் கொடுத்தார். பிறகு தேரர் அவர்கள் சில காணித் துண்டுகளை விலைக்கும் வாங்கி ஓய்வறை, ஆராமை போன்ற பன்சாலையின் உபரி கட்டிடங்களை நிருமாணித்துக்கொண்டார். இவை தொடர்பாக அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் எவரும் எதுவித எதிர்ப்பையும் காட்டவில்லை.
இஸ்ஸதீன் நகருக்கு பள்ளிவாசலின் தேவை
இஸ்ஸதீன் நகருக்கு மிக அன்மையில் அமைந்துள்ள பள்ளிவாசல் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. ஐ வேளைத் தொழுகைக்காக அந்தளவு தூரம் சென்று வருவதென்பது நடைமுறைக்குப் பொருத்தமானது அல்ல. மேலும் மாணவர்கள் சன்மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக முச்சக்கர வண்டிகளில் செல்வதாயின் 3000 – 4000 வரை செலவாகும். இந்தத் தொகையை இந்த மக்களால் சுமக்க முடியாது. எனவே பள்ளிவாசலொன்று இக் குடியிருப்பின் முஸ்லிம்களின் அடிப்படை அவசியத் தேவையாக மாறியது. இவர்களின் பெரும் குறையாகக் காணப்பட்ட பள்ளிவாசலை, இற்றைக்கு சில வருடங்களின் முன்னர் நிருமாணித்தனர். ‘மஸ்ஜிதுல் தக்வா’ என பெயர் சூட்டினர். அதன் சட்டபூர்வப் பதிவு ஆவணப் பணிகள் அனைத்தையும் மேற்கொண்ட பின்னர் நிருவாக சபையொன்றையும் அமைத்துக்கொண்டனர். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது?
பள்ளிவாசலுக்கு விழுந்த இடி
‘மஸ்ஜிதுல் தக்வா’ பள்ளிவாசலின் பதிவினை இரத்து செய்யுமாறு பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் (பதிலாக) என்ற கையொப்பத்துடன் கூடிய பணிப்புரைக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்படுகின்றது. இந்தத் திடீர் பணிப்புரையின் பின்னணி என்ன? பன்சாலையின் நாயக்கத் தேரரின் கோரிக்கையின் பேரில் இந்த வேண்டுகோள் (பணிப்புரை) கிடைத்திருக்கின்றமை மிகவும் கவலைக்கிடமானது. ஆரம்ப நாட்களில் இருந்த நாயக்கத் தேரர் மரணமடைந்த பின் அப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள இன்றைய நாயக்கத் தேரர் இப் பள்ளிவாசலினால் மக்கள் மத்தியில் அமைதி கெட்டுப்போகும் எனக் குற்றம்சாட்டியுள்ளார். பள்ளிவாசல் விவகாரத்தைச் சமாதானப்படுத்துவற்காக பள்ளிவாசல் நிருவாக சபையினரையும் நாயக்கத் தேரரையும் அழைத்த பொலிசார், விடயங்களை ஆராய்ந்துள்ளனர்.
உண்மையில் இக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. இப் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபடுவோர் 20 – 30 பேர் வரைதான். ஒலிபெருக்கி சாதனம் பாவிக்கப்படுவதில்லை. இதனால் ஏனையோருக்கு எதுவித பாதிப்புகளும் இல்லை. குடியிருப்பில் வதியும் சிங்கள மக்கள் முஸ்லிம்களுடன் எந்தவித மனக்கசப்பும் இல்லை. அவர்கள் என்றும் போல் நல்லுறவுடன் வாழுகின்றனர்.

மொழிபெயர்ப்பாளர் கருத்து:
இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றுக்கு பத்து இருபது பள்ளிவாசல்கள் உள்ளன. அப் பள்ளிவாசல்களையும் ஆளாளுக்குச் சொந்தம்கொண்டாடும் கசப்பான சம்பவங்கள் பரவலாக நடக்கின்றன. இந் நிலையில் இருக்கின்ற ஒரேயொரு பள்ளிவாசலையும் பாதுகாப்பதற்காக பொலிசுக்கும் அமைச்சுக்கும் ஏறி இறங்கும் சகோதர முஸ்லிம்களும் வாழுகின்றனர். அவ்வாறான கஸ்டங்களில் வாழும் முஸ்லிம்களுக்காக என்னால் என்ன செய்ய முடியும் என சிந்திப்பதும் கலந்துரையாடுவதும் திட்டமிடுவதும் செயல்படுவதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் உள்ள கடமை என்பேன். இந்தப் பொறுப்புணர்வை வாசகர் மனங்களில் உணர்த்த வேண்டும் என்ற நோக்கில் இதனை தமிழாக்கம் செய்துள்ளேன். எனது முயற்சியை அல்லாஹுதஆலா அங்கீகரிப்பானாக என வேண்டுகின்றேன்.
No comments:
Post a Comment