Tuesday, September 2, 2014

ஏங்கி கிடந்த நாய்களுக்கு எலும்பு துண்டு கிடைத்தது போல …Muise wahabdeen

ஏங்கி கிடந்த நாய்களுக்கு எலும்பு துண்டு கிடைத்தது போல …
தமது சொந்த நிலத்திலும், புலத்திலும் உதிரமாகக் கலந்திருக்கும் உறவுகளுக்கு அஸ்ஸலமுஅலைக்கும்.
தனிப்பட்ட கோபதாவங்கள், இயக்க பிரிவுகள், அரசியல் இலாப நட்டங்களை கணக்குப் பார்க்கும் நேரமல்ல. இயக்க, கட்சி, தனிப்பட்ட கோப தாபங்கள், குரோதங்களுக்கு, அப்பால் சமூகம் சார்ந்த சிந்தனை, செயற்பாடுகள் அமைதல் வேண்டும் ஏனெனில் இது எமது தனியுடமையல்ல. கடந்த சில நாட்களாக OCC-FRANCE அங்கத்தவளின் கருத்து வேறுபாடு சம்பந்தமாகத்தான் சொல்கிறேன்.
பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் நீங்களும் நானும் அங்கத்தவர்கள். என்னோடு நீங்களும், உங்களோடு நானும் இருப்பதே, இதை, இங்கே, இவ்வாறு, எழுத என்னைத் தூண்டியது. பாதிக்கப் பட்டவர்களில் நீங்களும் நானும் ஒருமித்தவர்கள். மிதிபட்ட வலி நம் எல்லோருக்குமானது..
இலங்கை தீவில் இன்னமும் இனவாத விஷச் செடிகள் வேர் பரப்பியபடி நிற்கின்றன. பொது பல சேனா, ராவய, சிங்ஹல உருமய, போன்ற முஸ்லிம் எதிர்ப்பு நிறுவனங்கள் நிகழ்ச்சி நிரல் ஒவ்வொன்றாக காட்சிக்கு வருகின்றன. அரசின் தொடர் மௌனம், அமைதி, நீடிக்கிறது. இது மேலும் மன வேதனை அளிக்கின்றது. சட்டத்தையும், ஒழுங்கையும், நிலை நாட்ட வேண்டிய நிறுவனங்கள் பார்வையாளர்களாகவும், பகடைக் காய்களாகவும் இருப்பது என்பது பலமிக்க அரசொன்றின் மறைமுகப் பங்களிப்பை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. அரசானது இதற்கான அவமான விளைவுகளை அறுவடை செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை, என்பது எனது ஊகம்.
எமது சமூகத்தின் துயர் நீக்க எல்லோரும் ஒரு வரிசைக்கு வர வேண்டிய தருணம் இது. இனியும் காலம் தாழ்த்த கூடாது.
ஏங்கி கிடந்த நாய்களுக்கு எலும்பு துண்டு கிடைத்தது போல ஒருவர் எதோ ஒன்றை சொல்லிவிட்டார் என்று சொல்லிக் கொண்டு அவருக்கெதிரான கூட்டத்தையும், கருத்துக்களையும், எதிர்ப்பையும் சேகரிப்பதில் நேரத்தையும் தமது வளத்ததையும் வீணாக்குவதை தவிர்த்து, சிந்திக்க வேண்டிய தருணமிது.
நடக்ககூடாது என்று எண்ணுகிற எல்லாமே நடந்தேறுகின்றன, சந்தி சிரிக்கும் Face Book, Viber, களத்தில் நடக்கிற கூத்துக்களோ பிரமாதம். ஒரு சில அங்கத்தவர்களின் ஒப்பனை முகங்களும் உரிந்து விழுந்து அவர்களின் உண்மை முகங்களை அடையாளப்படுத்திய வகையில், இந்தப் பிரச்சினை நமக்கு ஒரு விதத்தில் உதவத்தான் செய்திருக்கிறது.
பயம், பதவி, பணம், பலம், என்பவற்றுக்கு அப்பால் நீதிக்காக, உண்மைக்காக, உரிமைக்காக, எழுந்து நிற்பதும் போராடுவதும், எமது தலையாய கடமையாகும்.
ஒரு வலுவான கூட்டுக் கரங்கள் கை கோர்த்து இருக்க பிடித்து நிற்க வேண்டிய மிக மிக முக்கிய தருணம், வல்ல இறைவன் அந்த ஒற்றுமையையும் பலத்தையும் நமக்கு கொடுத்து அருள் புரியட்டும்!!
இவ்வண்ணம்
Muise Wahabdeen

No comments:

Post a Comment