Monday, September 29, 2014

கூடா நட்பு - Rasoolsha M.Sharoofi

உலகில் தோன்றிய மிகவும் கொடூரமான மனிதர்களுள் ஒருவர் என்று சித்தரிக்கப்படும்  'அசின் விராத்து' இலங்கை வந்தார் என்ற செய்தியைக் கேட்டபோது, சமீபத்தில் சுகுணா திவாகர் 'குழந்தைகளைக் கொல்வது எளிது' என்ற தலைப்பில் பல குட்டிக் கதைகளை இணைத்து ஒரு கதை எழுதியிருந்தார். அதில் வரும் ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது. நாட்டு நடப்புக்கு பொருத்தமான கதை என்பதால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

"புத்தர் மீண்டும் மறு பிறப்பு எடுத்திருந்தார்! ஆண்டுக்கணக்கில் தியானத்தில் இருந்தவரைப்போல கண்களைத் திறந்தார் புத்தர். அது ஒரு பூ மலர்வதைப் போல இருந்தது. தன்னிச்சையாக அவரது உதடுகள் 'உனக்கு நீயே ஒளி' என்று முணுமுணுத்தன.

தூரத்தில் பிரகாசமான நெருப்புப் பந்து ஒன்று மீண்டும் மீண்டும் தோன்றி மறைந்தது. கூடவே துப்பாக்கிகளின் ஓசைகள்  அடங்கி அடங்கி எழுந்தன. விடாமல் குடு வீச்சுக்களின் ஓசைகளும் கேட்டுக் கொண்டிருந்தன. புத்தர் குழப்பத்துடன் நடக்க ஆரம்பித்தார்.

கால்களை இடரின ஆயிரக் கணக்கான பிணங்கள். சித்தார்த்தனாக இருந்தபோது அவர் கண்ட சவ ஊர்வலம் நினைவுக்கு வந்தது. சுற்றிலும் ஒருமுறை பார்வையை ஓடவிட்டார். வெடி மருந்துகளின் கரித்துகள்கள் சிதறிக் கிடந்தன. அ ரச மர இலைகளால் கரித் துகள்களைக் கூட்டிச் சேகரித்தார். அந்தக் கரித்துகள்களைக்  கொண்டு 23 கோடியே 67 லட்சத்து 58 ஆயிரத்து 364 பென்சில்களைச் செய்து முடித்தார். கைகளில் பென்சில்களுடன் குழந்தைகளைத் தேடி நடக்கத் தொடங்கினார் புத்தர்!"

மியன்மாரில் நடந்த இன சுத்திகரிப்பில்,  எந்தப் பாவமும் அறியா நூற்றுக் கணக்கான பிஞ்சுக் குழந்தைகளை துடிக்க துடிக்க நெருப்பில் வதக்கிய காட்சிகளை மனிதர்களாகப் பிறந்த எவரும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்!  இந்த படுகொலைகளின் சூத்திரதாரி 'அசின் விராத்து' என்பது வெளிப்படையான உண்மை. 2013, ஜூன் மாத THE TIMES இதழ் கூட  இவர் முகத்தை அட்டைப் படத்தில் பிரசுரித்து  'The Face of Buddhist Terror' என தலைப்புப் போட்டிருந்தது உலகறிந்த உண்மை. அன்பு, கருணை, மனிதம் என உயரிய மனித விழுமியங்களை போதித்த பெளத்த சித்தாந்தத்துக்குள் மிரட்டல், கொலை, காட்டுமிராண்டித்தனம், பெளத்த தேசியம் போன்றவற்றை புகுத்திய 'அசின் விராத்து' போன்றவர்களை உலகம் அத்தனை இலகுவில் மறந்துவிடாது.

இவ்வாறன பின் புலம் கொண்ட ஒருவரை தங்களுக்கு நெருக்கமானவர் என்று BBS நட்புப் பாராட்டிக் கொளவது எதை அடைந்து கொள்வதற்காக? தீவிரவாதமற்ற அமைதியான ஓர் உலகை உருவாக்குவதற்காகவா?

photo-(https://www.tumblr.com/search/muslim+genocide)

Wednesday, September 24, 2014

Five Major Errors..... Thanks to http://qz.com/267471/five-errors-that-immediately-get-your-resume-rejected-at-google/

Five errors that immediately get your resume rejected at Google

This post originally appeared at LinkedIn. Follow the author here
I’ve sent out hundreds of resumes over my career, applying for just about every kind of job. I’ve personally reviewed more than 20,000 resumes. And at Google we sometimes get more than 50,000 resumes in a single week.

I have seen a lot of resumes.
Some are brilliant, most are just ok, many are disasters. The toughest part is that for 15 years, I’ve continued to see the same mistakes made again and again by candidates, any one of which can eliminate them from consideration for a job. What’s most depressing is that I can tell from the resumes that many of these are good, even great, people. But in a fiercely competitive labor market, hiring managers don’t need to compromise on quality. All it takes is one small mistake and a manager will reject an otherwise interesting candidate.
I know this is well-worn ground on LinkedIn, but I’m starting here because—I promise you—more than half of you have at least one of these mistakes on your resume. And I’d much rather see folks win jobs than get passed over.
In the interest of helping more candidates make it past that first resume screen, here are the five biggest mistakes I see on resumes:

Mistake 1: Typos

This one seems obvious, but it happens again and again. A 2013 CareerBuilder survey found that 58% of resumes have typos.
In fact, people who tweak their resumes the most carefully can be especially vulnerable to this kind of error, because they often result from going back again and again to fine tune your resume just one last time. And in doing so, a subject and verb suddenly don’t match up, or a period is left in the wrong place, or a set of dates gets knocked out of alignment. I see this in MBA resumes all the time. Typos are deadly because employers interpret them as a lack of detail-orientation, as a failure to care about quality. The fix?
Read your resume from bottom to top: reversing the normal order helps you focus on each line in isolation. Or have someone else proofread closely for you.

Mistake 2: Length

A good rule of thumb is one page of resume for every 10 years of work experience. Hard to fit it all in, right? But a three or four or 10-page resume simply won’t get read closely. As Blaise Pascal wrote, “I would have written you a shorter letter, but I did not have the time.” A crisp, focused resume demonstrates an ability to synthesize, prioritize, and convey the most important information about you. Think about it this way: the sole purpose of a resume is to get you an interview. That’s it. It’s not to convince a hiring manager to say “yes” to you (that’s what the interview is for) or to tell your life’s story (that’s what a patient spouse is for). Your resume is a tool that gets you to that first interview. Once you’re in the room, the resume doesn’t matter much. So cut back your resume. It’s too long.

Mistake 3: Formatting

Unless you’re applying for a job such as a designer or artist, your focus should be on making your resume clean and legible. At least 10-point font. At least half-inch margins. White paper, black ink. Consistent spacing between lines, columns aligned, your name and contact information on every page. If you can, look at it in both Google Docs and Word, and then attach it to an email and open it as a preview. Formatting can get garbled when moving across platforms. Saving it as a PDF is a good way to go.

Mistake 4: Confidential information

I once received a resume from an applicant working at a top-three consulting firm. This firm had a strict confidentiality policy: client names were never to be shared. On the resume, the candidate wrote: “Consulted to a major software company in Redmond, Washington.” Rejected! There’s an inherent conflict between your employer’s needs (keep business secrets confidential) and your needs (show how awesome I am so I can get a better job). So candidates often find ways to honor the letter of their confidentiality agreements but not the spirit. It’s a mistake. While this candidate didn’t mention Microsoft specifically, any reviewer knew that’s what he meant. In a very rough audit, we found that at least 5-10% of resumes reveal confidential information. Which tells me, as an employer, that I should never hire those candidates…unless I want my own trade secrets emailed to my competitors.
The New York Times test is helpful here: if you wouldn’t want to see it on the home page of the NYT with your name attached (or if your boss wouldn’t!), don’t put it on your resume.

Mistake 5: Lies

This breaks my heart. Putting a lie on your resume is never, ever, ever, worth it. Everyone, up to and including CEOs, get fired for this. (Google “CEO fired for lying on resumes” and see.) People lie about their degrees (three credits shy of a college degree is not a degree), GPAs (I’ve seen hundreds of people “accidentally” round their GPAs up, but never have I seen one accidentally rounded down—never), and where they went to school (sorry, but employers don’t view a degree granted online for “life experience” as the same as UCLA or Seton Hall). People lie about how long they were at companies, how big their teams were, and their sales results, always goofing in their favor.
There are three big problems with lying:
  1. You can easily get busted. The internet, reference checks, and people who worked at your company in the past can all reveal your fraud.
  2. Lies follow you forever. Fib on your resume and 15 years later get a big promotion and are discovered? Fired. And try explaining that in your next interview.
  3. Our moms taught us better. Seriously.
So this is how to mess up your resume. Don’t do it! Hiring managers are looking for the best people they can find, but the majority of us all but guarantee that we’ll get rejected.
The good news is that—precisely because most resumes have these kinds of mistakes—avoiding them makes you stand out.

இளைஞர்களும் உணர்வுகளும் ஒரு உளவியல் பார்வை.....U.H Hyder Ali

இளைஞர்களும்  உணர்வுகளும் ஒரு உளவியல் பார்வை.....U.H Hyde Ali

இன்றைய நமது சமூகம் இளைஞர்களின் பிழைகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டுகிறதே தவிர, அவர்களை பண்படுத்த தயாராக இல்லை. இன்றைய இளைஞர்களுக்கு தேவை அவர்களின் உணர்வுகள் பற்றிய சரியான் புரிதலே..இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உணர்வுகள் உயிருள்ளவை
இளைஞனின் வாழ்க்கையை அழகூட்டும் வண்ணங்கள் அவனது உணர்வுகளே. மனிதனின் உணர்வுதான் மற்ற உயிரினங்களில் இருந்த மனிதனை பிரித்துக்காட்டுகிறது.
அப்படிப்பட்ட உணர்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் அதன் விளைவாக உணர்வுகளை உரியமுறையில் உணரவும் வெளிப்படுத்தவும் இன்றைய இளைஞர்களை நமது கலாச்சாரம் அனுமதிப்பதில்லை.

இளைஞர்கள் தங்களது உணர்வு மாற்றங்களையோ சிக்கல்களையோ மனம் விட்டு பேசாமல் இருப்பதால் தேவையான விழிப்புணர்வும் அறிவும் வழிக்காட்டுதலும் இல்லாமல் போய்விடுகிறது.

இந்நிலையில் இளைஞர்கள் தடம்மாறி போவதுண்டு, அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூடிய பருவம் இளைமைபருவம். பயம், கோபம், மகிழ்ச்சி, கவலை என நான்கு உணர்ச்சிகளை தாய் உணர்வுகளை இன்றைய உளவியலார் குறிப்பிடுகின்றனர். இளைஞர்களைப் பொறுத்த மட்டில் போதிய அளவு முதிர்ச்சி இல்லாததால் சில வேளைகளில் அளவுக்கு அதிகமாகவும் சில வேளைகளில் வெளிப்படுத்தப்படாமல் உணர்வுகள் இருக்க வாய்ப்புண்டு.

எதிர்பாலுணர்வு, நமது தமிழக பண்பாடு கற்றுக்கொடுத்த சில தவறான மதிப்பீடுகளால் இளைஞர்கள் பாலுணர்வு குறித்து சிந்திப்பது, பேசுவது, வாசிப்பது, பார்ப்பது போன்ற செல்பாடுகள் தவிர தங்களை தாங்கள் கட்டுப்படுத்தி பின்பு அதன் எதிர்விளைவுகளை சந்திக்கின்றனர். இவை இளைமைப்பருவத்தில ஏற்படும் இயற்கையான உணர்வு என்பதையும் உயர்வுகள் உயிருள்ளவை என்பதையும் உணர்தல் அவசியம்.

இளைஞர்கள் ஏன் உணர்வுகளை வெளிப்படத்த வேண்டும்?
இளைஞர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தாவிட்டால் மூன்று விதமான பாதிப்புகளை சந்திக்க கூடும்:
1. உடல் ரீதியான பாதிப்ப
2. மன ரீதியான பாதிப்பு
3. குடும்பம் மற்றும் சமூக உறவில் பாதிப்பு.

இளைஞர்கள் உணர்வுகளை ஏன் வெளிப்படுத்தவதில்லை?
இளைஞர்களின் உள்மனத்தின் இருண்டபகுதியில் பல நிகழ்வுகள் ஏக்கங்கள் எண்ணங்கள் பதிந்திருக்கின்றன. அதை வெளிப்படுத்த விரும்பாததற்கு காரணங்கள் பல....

• குற்றப்பழி உணர்வுகள் சில அந்தரங்க நிகழ்வுகள்
• கடந்தகால தவறுகள், இன்னும் பல…

இளைஞர்கள் உணர்வுகளை கையாள வழிமுறைகள்

இளைஞர்கள் உணர்வுகளை தகுந்த முறையில் கையாள கற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளப்படாத உணர்வுள் இளைஞர்களுக்கு எதிராக செயல்படும். இளைஞர்களின் வளர்ப்பு முறையாலும் கல்வி முறையாலும் உணர்வுகள் ஏற்றுக்கொள்ளபடாமல் போக ஏதுவாய் அமைகின்றன. இளைஞர்கள் உணர்வுகளை உண்மையாக உள்ள படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1. அடக்கி வைத்தல்: கோபப்படாதே! என்ற வார்த்தையும் இளம்பெண்கள் சத்தமாக சிரிக்கக் கூடாது, இளைஞர்கள் கண்ணீர் விடக்கூடாது போன்ற பெரியவர்கள் கண்டிப்ப இன்றைய இளைஞர்கள் மனத்தில் ஆழப்பதிந்து கோபப்பட வேண்டிய ஒரு சூழலில் கோபத்தை அடக்குவதும் அதனால் வரும் விளைவுகளை எண்ணி கட்டுப்படுத்துவதும் காணப்படுகிறது. இத்தகைய மனநிலை தவறு என்ற மனநிலைக்கு இன்றைய இளைஞர்களை வர வேண்டும். உணர்வுகளை தேவையான இடத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

2. முழுமையாக வெளிப்படுத்துதல்: இளைஞர்கள் உணர்வுகளை தன் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்து சரியான நேரத்தில் உரிய முறையில் வெளிப்படுத்த பழகிக்கொள்ள வேண்டம்.

3. பொறுப்படன் வெளிப்படத்துதல்: கோபத்தை உரிய முறையில் பொறுப்புடன் வெளிப்படத்துதல். இளைஞன் தன்னுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் அவனுக்கும், வெளிப்படுத்தக்கூடிய நபருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு இருக்கவேண்டும். சூழ்நிலையை மனதில் கொண்டு விவேகத்துடன் செயல்படவேண்டும். இதுவே மற்ற இரண்டைகாட்டிலும் சிறந்தது.

4. இளைஞர்களுக்கு தேவையான மனநிலை:
• உறவுகளை வளர்க்கம் உணர்வுகளைப்ற்றி ஆழமாக அறிதல் இளைஞனுக்கு அவசியம். வெளிப்படுத்தகூடிய உணர்வுகள், வெளிப்படுத்தகூடாத உணர்வுகள் பற்றிய புரிதலும் அவற்றிலிருந்து விடுதலை பெற வழிவகுத்தலும் இளைஞனுக்கு அவசியம்.

• இளைஞன் தன்னை பற்றி முழுமையாக அறிந்து நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ளும் மனநிலை தேவை.

• உணர்வுகளை நல்லது கெட்டது என பிரிக்கமுடியாது. அவை இளைஞனின் உள்ளிருக்கும் மனநிலைகளின் வெளிப்பாடே. இளைஞர்கள் நடிப்பதை கைவிட்டு இயல்பாக செயல்பட வேண்டும்.

• எனது உணர்வுகள் எனக்குத் தெளிவாகும் போத பிறரது உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியும். உணர்வுகள் பாதிக்கப்படும் போது பிரச்சனைகள் பிளவுகள் ஏற்பட ஏதுவாகின்றது.

இன்றைய இளைய சமூகம் பொய்யுணர்ச்சியைக் காதல் என்று காட்டும் மாயஉலகில் இருந்து விடுபட்டு வாழ முயல வேண்டும். காரணம் காதல் உணர்ச்சிகளில் ஆரம்பித்து உணர்ச்சிகளிலேயே முடிந்துவிடுகின்றது. அதையும் தாண்டி உணர்வுளில் ஆரம்பித்து, அறிவில் வந்து முடிவடைவதாக இளைஞனின் செயல்பாடுகள் இருத்தல் அவசியம். சீரானமுறையில் சிந்தித்து அறிவுத்தெளிவு பெற வேண்டியவர்களாய் இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

Saturday, September 6, 2014

සල්ලි ගෙවා මරණය වෙන් කරගන්නා යුරෝපීය දිවිය- Hisham Hussain

// සල්ලි ගෙවා මරණය වෙන් කරගන්නා යුරෝපීය දිවිය \\ දෙමළෙන්: Rashoolsha Mohamed Sharoofi, France මගේ ගෙදරත් දුම්රියපලත් අතර බස් නැවතුම් හතරක් තියෙනවා. එයින් දෙවැනි නැවතුම ළඟ මිනී පෙට්ටි ව්‍යාපාර ස්ථානයක් තියෙනවා. එතැන එල්වලා තිබුන දැන්වීමක් දවස් දෙකකට කලියෙන් දැක්කා. ඒක ලියැවිලා තිබුනේ ප්‍රංශ බාසාවෙන්. සිංහලෙන් කියනවානම්, ‘මාසෙකට යූරෝ 17 ශත 25 ක් ගෙවා මරණයෙන් පසු ඔබගේ අවසන් ගෞරවය සහතික කරගන්න”. යුරෝපානු දිවිපෙවෙතේ ගැටළුකාරි තත්වය තනි වැකියකින් හඟවන අපූරු වාක්‍යයක් ඒක. ‘මැරුණාට පස්සේ කුණුවෙලා යන ශරීරය ති‍යාගෙන කව්රුත් හැඩ බලනවාද? එක්කෝ වලදාවි, නැතිනම් පුච්චාවි” කියලයි මං ඊට කලින් හිතාගෙන හුන්නේ. ඒත් ඒකටත් රුපියල් දාස් ගණන් ඕනෙලු. ඒ විතරක් නෙවෙයි, සුළඟ අල්ලගන්න වගේ දුවන වැඩ රාජකාරියම ඉරණම කියා හැල්මේ දුවන දිවිපෙවෙත, නෑදෑකම් ගැටළුවක් කරගෙන ආදරය, ස්නේහය වැනි උසස් මිනිස් ගුණධර්ම පස්සට තල්ලුකරල ‘ව්‍යාපාරය : මුදල්’ කියන සීමාවන් දෙක තුල මිනිස් ජීවිතය සිරකර තියෙන්නේ යුරෝපයේ විතරක් නෙවි ලංකාව, ඉන්දියාව වැනි රටවලත් මේකයි තත්වය. තම රට වෙනුවෙන්, තම පවුල් වෙනුවෙන් නිවනක් නැතිව දුවන අය හැමදාම දකිනවා. ඔවුන් මහළුවියට පත්වෙලා වාරු නැතිවෙනකොට ඔවුන් ළඟ හැම පහසුකමක්ම තියේවි. මාසේ අන්තිමට විශ්‍රාම වැටුපකුත් බරටම ඇවිත් අතටම ලැබේවි. ගෙදර වැඩපල කරල දෙන්න සේවකයිනුත් සිටීවි. ඒත්, හිතට ලංවෙලා කතාබහ කරන්න, සුවදුක් විමසන්න දුක සැප බෙදාගන්න එක නෑකමක්වත් අසලක නොහිඳීවි. ඔවුනුත් තමන්ගේ කොටසට රස්සාව කියන සුළිසුළඟට අහුවෙලා විසිවෙමින් සිටීවි. මානසික සංකීර්ණතාවය වැඩිවෙලා, සතුට තුරන්වෙලා, බැරිකම වෙලාගන්න කොට ‘වැඩිහිටි නිවස’ යු‍රෝපානු වැඩිහිටි පුරවැසියන්ගේ නවාතුම්පලක් වෙලා. ළඟදී දවසක වැඩිහිටි නිවසක සේවය කරන මිතුරෙකු කීවා. හිටපු හමුදා නිලධාරියෙක් රෑ දාවල් නොබලා, පුච්චන අව්වත් මිදුනු හිමත් නොතකා දේශ සීමාවේ සේවය කළ තැනැත්තෙක්. තම ජීවිතෙන් වැඩි කොටසක් රට වෙනුවෙන් පරිත්‍යාග කළ රණවි‍රුවෙක්. ඔහු අභාවප්‍රාප්ත වුනා. අභාවප්‍රාප්ත වී දින ගණනාවකට පසුවයි ඔහුගේ භාරකරු වූ පුතා පිටරටක සිට පැමිණියේ. වැඩිහිටි නිවෙස්වල පවා මරණ දැන්වීම බිරිඳට ලැබේවිද, පුතා දැනගනීද, දුවගේ අතට ලැ‍බේවිද, නියමිත වෙලාවට සිදුවිය යුතු වතාවත් ඉටුවේවිද කියන සැකය ආතතිය අඩුකරන්න හැම දෙයක්ම පෙර සූදානමින් සැලසුම් කරන යුරෝපයේ මිනිසුන් මෙයත් සැලසුම් කිරීමට හුරුවෙන්න ඇති. එහි ප්‍රතිඵලේ තමා ‘උඹේ මලසිරුර උඹම වලදාගනින්’ කියන්නා වාගේ ඒ අවවාදාත්මක ප්‍රචාරක දැන්වීම. ඒක දැක්ක වෙලේ සිට ‍කොහේදෝ කියවපු වැකියක් මතකයේ දෝංකාර දෙනවා, “රස්සාවම ඉරණම කියා හිතාගෙන ඉන්න අය, තම උත්සාහවන්තකමේ පලය රස විඳින්නේ නැහැ”. ගෝලීයකරණයයි, ස්වතන්‍ත්‍රකරණයයි අපට දුන්න තෑග්ග - රස්සාවත් විවේකයත් අතර සමබරතාවය සිඳීම. සිංහලෙන්: Hisham Hussain, Puttalam ස්තුතිය: frcmc.blogspot.fr

Wednesday, September 3, 2014

மாத்தறை இஸ்ஸதீன் நகருக்கு பள்ளிவாசல் ஆகாதாம்! Hisham Hussain

மாத்தறை இஸ்ஸதீன் நகருக்கு பள்ளிவாசல் ஆகாதாம்


Hisham Hussain, Puttalam


 மாத்தறை (தென் மாகாணம்) நகரைச் சேர்ந்த FASY AJWARD அவர்களினால் Islam In Sinhala எனும் முகநூல் பக்கத்தில் (facebook page) சிங்கள மொழியில் எழுதப்பட்ட கட்டுரை. மேற்படி Islam In Sinhala பக்கம் சிங்கள மொழிமூலம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும், இஸ்லாம் முஸ்லிம்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும், பிழையான கருத்துக்களுக்கு எதிராக வாதாடும் முகநூல் பக்கங்களில் ஒன்றாகும்.




மாத்தறை ‘இஸ்ஸதீன் நகரம்’

இஸ்ஸதீன் நகரம் தனியொரு மனிதனின் காணியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு. இஸ்ஸதீன் என்பவர் தனக்குச் சொந்தமான 85 ஏக்கர் காணியில் அழகானதொரு நகரத்தைத் திட்டமிட்டார். அதில் மக்கள் வீடுகளைக் கட்டிக்கொண்டு வாழுவதற்காக காணித் துண்டுகளை வழங்கினார். முஸ்லிம், சிங்களம் என இனவாதம் பாராமல் எவரும் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு வசதிகளையும் செய்திருந்தார். அவரது விருப்பம் போலவே அன்று முதல் இன்று வரை சிங்கள, முஸ்லிம் குடும்பங்கள் பேதம் என்ற சொல்லைக் கூட அறியாதவர்களாக ஒற்றுமையாக வாழுகின்றனர்.

எனினும் இஸ்ஸதீன் அவர்கள் முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் நிருமாணிப்பதற்கு என ஓர் இடத்தை ஒதுக்காமல், அதனை விட பரந்த நோக்கில் முஸ்லிம்களுக்கான சன சமூக நிலையமொன்றுக்காக என இடமொன்றை ஒதுக்கியிருந்தார். அச் சன சமூக நிலையத்திற்கு செல்லும் பாதையின் பெயர் ‘மஸ்ஜித் வீதி’ என நில அளவை வரைப் படத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று அந்த வீதி ‘கொதலாவலை வீதி’ என மாற்றப்பட்டு உள்ளது.

ஆரம்பக் காலங்களில் இக் குடியிருப்பில் பள்ளிவாசல் ஒன்று இல்லாததால் முஸ்லிம்கள் குடியிருப்பதற்கு நாட்டம் காட்டவில்லை. எனினும் முஸ்லிம்களின் ஜனாஸா (பிரேத) நல்லடக்கத்திற்காக காணித் துண்டு ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அம் மையவாடியில் இரண்டு முஸ்லிம்களின் பிரேதங்கள் அடக்கம் செய்யப்பட்டும் இருந்தன. தூரதிருஷ்டவசமாக அந்தக் காணித் துண்டிலும் சிலர் அத்துமீறி வீடுகளைக் கட்டிக்கொண்டனர்.

எவ்வாறாயினும் இஸ்ஸதீன் அவர்கள் குணானந்த நாயக்கத் தேரரை (பிரதான பௌத்த பிக்கு) இக் குடியிருப்புக்கு அழைத்து வந்து அவருக்கு ஒரு பன்சாலையும் நிருமாணித்துக் கொடுத்தார். பிறகு தேரர் அவர்கள் சில காணித் துண்டுகளை விலைக்கும் வாங்கி ஓய்வறை, ஆராமை போன்ற பன்சாலையின் உபரி கட்டிடங்களை நிருமாணித்துக்கொண்டார். இவை தொடர்பாக அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் எவரும் எதுவித எதிர்ப்பையும் காட்டவில்லை.

இஸ்ஸதீன் நகருக்கு பள்ளிவாசலின் தேவை 

இஸ்ஸதீன் நகருக்கு மிக அன்மையில் அமைந்துள்ள பள்ளிவாசல் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. ஐ வேளைத் தொழுகைக்காக அந்தளவு தூரம் சென்று வருவதென்பது நடைமுறைக்குப் பொருத்தமானது அல்ல. மேலும் மாணவர்கள் சன்மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக முச்சக்கர வண்டிகளில் செல்வதாயின் 3000 – 4000 வரை செலவாகும். இந்தத் தொகையை இந்த மக்களால் சுமக்க முடியாது. எனவே பள்ளிவாசலொன்று இக் குடியிருப்பின் முஸ்லிம்களின் அடிப்படை அவசியத் தேவையாக மாறியது. இவர்களின் பெரும் குறையாகக் காணப்பட்ட பள்ளிவாசலை, இற்றைக்கு சில வருடங்களின் முன்னர் நிருமாணித்தனர். ‘மஸ்ஜிதுல் தக்வா’ என பெயர் சூட்டினர். அதன் சட்டபூர்வப் பதிவு ஆவணப் பணிகள் அனைத்தையும் மேற்கொண்ட பின்னர் நிருவாக சபையொன்றையும் அமைத்துக்கொண்டனர். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது?

பள்ளிவாசலுக்கு விழுந்த இடி 

மஸ்ஜிதுல் தக்வா’ பள்ளிவாசலின் பதிவினை இரத்து செய்யுமாறு பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் (பதிலாக) என்ற கையொப்பத்துடன் கூடிய பணிப்புரைக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்படுகின்றது. இந்தத் திடீர் பணிப்புரையின் பின்னணி என்ன? பன்சாலையின் நாயக்கத் தேரரின் கோரிக்கையின் பேரில் இந்த வேண்டுகோள் (பணிப்புரை) கிடைத்திருக்கின்றமை மிகவும் கவலைக்கிடமானது. ஆரம்ப நாட்களில் இருந்த நாயக்கத் தேரர் மரணமடைந்த பின் அப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள இன்றைய நாயக்கத் தேரர் இப் பள்ளிவாசலினால் மக்கள் மத்தியில் அமைதி கெட்டுப்போகும் எனக் குற்றம்சாட்டியுள்ளார். பள்ளிவாசல் விவகாரத்தைச் சமாதானப்படுத்துவற்காக பள்ளிவாசல் நிருவாக சபையினரையும் நாயக்கத் தேரரையும் அழைத்த பொலிசார், விடயங்களை ஆராய்ந்துள்ளனர்.

உண்மையில் இக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. இப் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபடுவோர் 20 – 30 பேர் வரைதான். ஒலிபெருக்கி சாதனம் பாவிக்கப்படுவதில்லை. இதனால் ஏனையோருக்கு எதுவித பாதிப்புகளும் இல்லை. குடியிருப்பில் வதியும் சிங்கள மக்கள் முஸ்லிம்களுடன் எந்தவித மனக்கசப்பும் இல்லை. அவர்கள் என்றும் போல் நல்லுறவுடன் வாழுகின்றனர்.

மொழிபெயர்ப்பாளர் கருத்து:

இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றுக்கு பத்து இருபது பள்ளிவாசல்கள் உள்ளன. அப் பள்ளிவாசல்களையும் ஆளாளுக்குச் சொந்தம்கொண்டாடும் கசப்பான சம்பவங்கள் பரவலாக நடக்கின்றன. இந் நிலையில் இருக்கின்ற ஒரேயொரு பள்ளிவாசலையும் பாதுகாப்பதற்காக பொலிசுக்கும் அமைச்சுக்கும் ஏறி இறங்கும் சகோதர முஸ்லிம்களும் வாழுகின்றனர். அவ்வாறான கஸ்டங்களில் வாழும் முஸ்லிம்களுக்காக என்னால் என்ன செய்ய முடியும் என சிந்திப்பதும் கலந்துரையாடுவதும் திட்டமிடுவதும் செயல்படுவதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் உள்ள கடமை என்பேன். இந்தப் பொறுப்புணர்வை வாசகர் மனங்களில் உணர்த்த வேண்டும் என்ற நோக்கில் இதனை தமிழாக்கம் செய்துள்ளேன். எனது முயற்சியை அல்லாஹுதஆலா அங்கீகரிப்பானாக என வேண்டுகின்றேன்.

Tuesday, September 2, 2014

France ban muslim workers from nuclier sites (thanks to Aljazeera)

http://www.aljazeera.com/news/europe/2014/09/france-bans-muslim-worker-from-nuclear-sites-20149271836172631.html

ஏங்கி கிடந்த நாய்களுக்கு எலும்பு துண்டு கிடைத்தது போல …Muise wahabdeen

ஏங்கி கிடந்த நாய்களுக்கு எலும்பு துண்டு கிடைத்தது போல …
தமது சொந்த நிலத்திலும், புலத்திலும் உதிரமாகக் கலந்திருக்கும் உறவுகளுக்கு அஸ்ஸலமுஅலைக்கும்.
தனிப்பட்ட கோபதாவங்கள், இயக்க பிரிவுகள், அரசியல் இலாப நட்டங்களை கணக்குப் பார்க்கும் நேரமல்ல. இயக்க, கட்சி, தனிப்பட்ட கோப தாபங்கள், குரோதங்களுக்கு, அப்பால் சமூகம் சார்ந்த சிந்தனை, செயற்பாடுகள் அமைதல் வேண்டும் ஏனெனில் இது எமது தனியுடமையல்ல. கடந்த சில நாட்களாக OCC-FRANCE அங்கத்தவளின் கருத்து வேறுபாடு சம்பந்தமாகத்தான் சொல்கிறேன்.
பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் நீங்களும் நானும் அங்கத்தவர்கள். என்னோடு நீங்களும், உங்களோடு நானும் இருப்பதே, இதை, இங்கே, இவ்வாறு, எழுத என்னைத் தூண்டியது. பாதிக்கப் பட்டவர்களில் நீங்களும் நானும் ஒருமித்தவர்கள். மிதிபட்ட வலி நம் எல்லோருக்குமானது..
இலங்கை தீவில் இன்னமும் இனவாத விஷச் செடிகள் வேர் பரப்பியபடி நிற்கின்றன. பொது பல சேனா, ராவய, சிங்ஹல உருமய, போன்ற முஸ்லிம் எதிர்ப்பு நிறுவனங்கள் நிகழ்ச்சி நிரல் ஒவ்வொன்றாக காட்சிக்கு வருகின்றன. அரசின் தொடர் மௌனம், அமைதி, நீடிக்கிறது. இது மேலும் மன வேதனை அளிக்கின்றது. சட்டத்தையும், ஒழுங்கையும், நிலை நாட்ட வேண்டிய நிறுவனங்கள் பார்வையாளர்களாகவும், பகடைக் காய்களாகவும் இருப்பது என்பது பலமிக்க அரசொன்றின் மறைமுகப் பங்களிப்பை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. அரசானது இதற்கான அவமான விளைவுகளை அறுவடை செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை, என்பது எனது ஊகம்.
எமது சமூகத்தின் துயர் நீக்க எல்லோரும் ஒரு வரிசைக்கு வர வேண்டிய தருணம் இது. இனியும் காலம் தாழ்த்த கூடாது.
ஏங்கி கிடந்த நாய்களுக்கு எலும்பு துண்டு கிடைத்தது போல ஒருவர் எதோ ஒன்றை சொல்லிவிட்டார் என்று சொல்லிக் கொண்டு அவருக்கெதிரான கூட்டத்தையும், கருத்துக்களையும், எதிர்ப்பையும் சேகரிப்பதில் நேரத்தையும் தமது வளத்ததையும் வீணாக்குவதை தவிர்த்து, சிந்திக்க வேண்டிய தருணமிது.
நடக்ககூடாது என்று எண்ணுகிற எல்லாமே நடந்தேறுகின்றன, சந்தி சிரிக்கும் Face Book, Viber, களத்தில் நடக்கிற கூத்துக்களோ பிரமாதம். ஒரு சில அங்கத்தவர்களின் ஒப்பனை முகங்களும் உரிந்து விழுந்து அவர்களின் உண்மை முகங்களை அடையாளப்படுத்திய வகையில், இந்தப் பிரச்சினை நமக்கு ஒரு விதத்தில் உதவத்தான் செய்திருக்கிறது.
பயம், பதவி, பணம், பலம், என்பவற்றுக்கு அப்பால் நீதிக்காக, உண்மைக்காக, உரிமைக்காக, எழுந்து நிற்பதும் போராடுவதும், எமது தலையாய கடமையாகும்.
ஒரு வலுவான கூட்டுக் கரங்கள் கை கோர்த்து இருக்க பிடித்து நிற்க வேண்டிய மிக மிக முக்கிய தருணம், வல்ல இறைவன் அந்த ஒற்றுமையையும் பலத்தையும் நமக்கு கொடுத்து அருள் புரியட்டும்!!
இவ்வண்ணம்
Muise Wahabdeen

Monday, September 1, 2014

'இறுதி மரியாதை விற்பனைக்கு.....' Rasoolsha M.Sharoofi

எனது வீட்டுக்கும் புகையிரத நிலையத்துக்கும் இடையில் நான்கு பஸ் நிறுத்தங்கள் உள்ளன. அதில் இரண்டாவது நிறுத்தத்தில் சவப்பெட்டி விற்பனை செய்யும் ஒரு வியாபார நிலையமும் இருக்கின்றது. அதன் வெளிப்பகுதியில் புதிதாக ஒரு விளம்பரம் ஒட்டப்பட்டிருப்பதை இரண்டு நாட்களுக்கு முன்புதான்  அவதானித்தேன் (படத்தைப் பார்க்கவும்).

தமிழில் சொல்வதாக இருந்தால், 'மாதத்துக்கு 17 யூரோ 25 சதங்கள்செலுத்தி மரணித்த பின் (உங்கள்) இறுதி மரியாதையை உறுதி செய்து கொள்ளுங்கள்' என சொல்ல முடியும். ஐரோப்பாவின் வாழ்வியல் சிக்கலை ஒற்றை வரியில் உணர்த்தும் அற்புதமான வாசகம் இது.

"உயிர் பிரிந்த பின் அழுகும் உடலை வைத்து என்ன அழகா பார்ப்பார்கள்? ஒன்றில் இழுத்துப் போட்டு புதைப்பார்கள்! அல்லது எரியூட்டுவார்கள்" என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்கும் பல ஆயிரங்களில் பணம் தேவைப் படுகிறதாம்....

அது மட்டுமல்ல, காற்றைப் பிடிப்பதைப் போல வேலையே கதியென ஓட வைக்கும் வாழ்வியல், உறவுகளை சிக்கலாக்கி  அன்பு, பாசம் போன்ற உயரிய மனிதப் பண்புகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, வியாபாரம்... பணம் என்ற இரு  எல்லைகளுக்குள் மனித வாழ்வை முடக்கியிருப்பது ஐரோப்பாவில் மட்டுமல்ல, இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் இதே நிலைதான்.

காற்றாகப் பறந்து, நாட்டுக்காக தனது குடும்பத்துக்காக  மாடாக உழைப்பவர்களை தினமும் காண்கிறோம். அவர்கள் முதிர்ந்து இயலாமை எனற கட்டத்துக்கு வரும் போது அவர்களிடம் எல்லா வசதிகளும் இருக்கும்.

மாதம் முடிய ஓய்வூதியம் கணக்கில் வந்து விழும். வீட்டு வேலைகளை செய்து கொடுக்க  வேலையாட்கள் இருப்பார்கள். ஆனால், மனம்  விட்டு பேசுவதற்கு, சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கு  ஒரு உறவு கூட அருகில் இருக்காது.  அவர்களும் தங்கள் பங்குக்கு வேலை என்ற சூறாவளிக்குள் சிக்கி சுழன்று கொண்டிருப்பார்கள்.

மன இறுக்கம் அதிகாமாகி, சந்தோசம் தொலைந்து, இயலாமை படுத்தியெடுக்க ஒரு கட்டத்தில் முதியோர்  இல்லங்கள் ஐரோப்பிய பெருசகளின் தவிர்க்க முடியாத தரிப்பிடங்களாகிவிட்டன.

அண்மையில் முதியோர் இல்லமொன்றில் பணி புரியும் நண்பர் ஒருவர் சொன்னார். முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் இரவு பகலாக, வெயிலிலும் பனியிலும் எல்லையில் காவல் நின்றவர், தனது வாழ்வின் பெரும் பகுதியை நாட்டுக்காக அர்பணித்துக் கொண்டவர் மரணித்து விட்டாராம்.  மரணித்து பல தினங்களாகிய பின்னரே அவரின் பொறுப்புதாரரனா மகன் வெளி நாடு ஒன்றில் இருந்து வந்து சேர்ந்தாராம்!

முதியோர் இல்லங்களிலும் மரண  செய்தி மனைவிக்கு எட்டுமோ, மகனுக்கு எட்டுமோ, மகளுக்கு எட்டுமோ உரிய நேரத்தில் உரியது நடக்குமோ என்ற பதற்றத்தை நீக்கத்தான். எதை எதையோ முன் கூட்டியே திட்டமிடும் இவர்கள் இதையும் திட்டமிட பழக்கப் படுத்தப்படுகிறார்கள் போலும். அதன் விளைவுதான்  'உன் உடலை நீயே புதைத்துக்கொள்' என்ற முன்னெச்சரிக்கை விளம்பரங்கள்.

எங்கேயோ வாசித்த வரி ஒன்று நினைவுக்கு வருகிறது, "வேலையே கதியென கிடப்பவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனை ருசிப்பதில்லை".

உலகமயமாக்கல், தாராளமயப்படுத்தல்  தந்த பரிசு- வேலைக்கும் ஓய்வுக்கும் இடையில் நிகழ்ந்த சமநிலைத் தகர்ப்பு.

පිරිමියා පරාජය වීම – කරන්න දෙයක් නැති රටක හිස්වූ ජීවිතවල දේශපාලන-ආර්ථිකය Thanks to www.samabima.com & The Puttalam Times

පිරිමියා පරාජය වීම – කරන්න දෙයක් නැති රටක හිස්වූ ජීවිතවල දේශපාලන-ආර්ථිකය (31/08/2014)

தமிழில் Hisham Hussain...


නමගිය ආයතනවල වැඩ කරන ලංකාවේ බහුතරයක් මාධ්‍යවේදීන් බලවත් ස්ත‍‍්‍රියකගෙන් පහරකෑමට ඕනෑම වෙලාවක සුදානම්ය. නමුත් බලවත් නොවන සාමාන්‍ය ස්ත‍‍්‍රියක් විසින් කිසිවෙකුට පහරදීම ඔවුන්ට තේරුම් ගත නොහැකි අත්භූත ප‍්‍රපංචයකි.

වාරියපොලදී තමන්ට ලිංගික අතවරයක් කිරීමට පැමිණි අයෙකුට පහර දී ගැලවීමට තරුණ ස්ත‍‍්‍රියකට සිදුවූයේ ඇයිද යන්න පෙන්වනවා වෙනුවට ඒ අසල සිටි ටයිම් කීපර් කෙනෙකු ඇමැති ආරක්ෂකයෙකු ලෙස ඔවුන්ට පෙනෙන්නේ ඒ නිසාය. ඉහත කී බොහෝ මාධ්‍ය ආයතනවලට මැති ඇමැති බිරින්දෑවරු ආරක්ෂකයින් සමග පැමිණ පාට් දමා යන අතර එහිදී බොහොමයක් මාධ්‍යවේදීන් පමණක් නොව අභීත කතෘවරුන් පවා වාරියපොලදී පහරකෑමට ලක්වූ සෙල්වා මෙන් බිම බලාගෙන සිටිනවා විය හැකිය. එම නිසා මේ මාධ්‍යවේදීන් තමන් සෙල්වා වැනි දුර්වල ස්ථානයකට මානසිකව ආරෝපණය වී පහර දුන් තරුණිය ඇමැති බිරියක් හෝ දියණියක් බවට පරිකල්පනය කරන්නේ මේ මානසික තත්ත්වයෙනි. තරුණිය ගාමන්ට් ෆැක්ට්‍රියක වැඩ කරන සාමාන්‍ය අයෙකු බව පසුව හෙළි වූ විට ද මේ අය කළේ මෙම සිදුවීමෙන් පසු සෙල්වාගේ පවුල් ජීවිතය විනාශ වූ බවට ප‍‍්‍රචාරයක් ලබාදී නැවතත් තරුණියට එරෙහිව මතයක් ඇති කිරීමයි. වාරියපොල තරුණියගේ කණේ පාරෙන් රිදුම් කෑවේ සෙල්වා පමණක් නොවන බව මින් පැහැදිලිය.

බොහෝ දෙනෙකු අවිඥානිකව සෙල්වාට කැමැතිවීමට තවත් හේතුවක් වන්නේ ස්ත‍‍්‍රීන් ඇදිය යුතු ඇදුම පිළිබද සංකල්පය සම්බන්ධයෙන් බොහෝ උගත් යැයි සැලකෙන ලාංකිකයන්ගේ මතය සෙල්වාගේ මතයට වඩා වෙනස් නැති වීමයි. අනෙක් අතින් පාරේ යන එන ස්ත‍‍්‍රීන් පමණක් නොව තමන් සමග එකට සේවය කරන ස්ත‍්‍රීන්ට පවා ලිංගිකත්වය මුල් කරගෙන විහිළුවට ලක්කිරීමට පිරිමින්ට අයිතියක් ඇතැයි සිතන්නේ සෙල්වා පමණක් නොවේ.
මේ පිළිබදව විග‍‍්‍රහ කිරීමට ස්ත‍‍්‍රීවාදය, සදාචාරය, අධ්‍යාපනය වැනි විවිධ මිනුම් දඩු උපයෝගී කර ගත හැකි වූවත් මෙය ආර්ථික ගැටළුවක් ලෙස විග‍‍්‍රහ කිරීම උචිත යැයි හැගේ. රටක ආර්ථිකය රදා පවතින්නේ නිෂ්පාදන ආර්ථිකයක් මත නම් එම රටේ ස්ත‍්‍රීන්ට මෙන්ම පුරුෂයන්ටද නිකරුනේ සිටීමට කාලයක් නැත. ඔවුන් සෑමවිටම තමන්ට හෝ සමාජයට අදාළ කාර්යයක නිරත වෙමින් සිටියි. ඒ නිසා අනුන්ගේ ඇදුම් ගැන සීතිමට ඔවුන්ට කාලයක් නැත. එසේම එවැනි රටක බස් හෝල්ට්වල නිකරුණේ කාලය ගෙවනවා කියා දෙයක් එවිට ඇති වන්නේ නැත. මන්ද මිනිසුන් නිකං බස් හෝලට්වල කාලය ගෙවන්නේ නම් එය රටේ ආර්ථිකයට පාඩුවක් වන බැවිනි. එසේම ස්ත‍‍්‍රිය නිෂ්පාදන ක‍්‍රියාවලියට සමානව දායක කරගැනීමට පටන් ගත් විට පිරිමින් තුළ ස්ත‍‍්‍රීන් පිළිබද පවතින අගතීන් සෑහෙන ප‍‍්‍රමාණයක් ඉවත දැමීමට සිදුවනු ඇත. යුරෝපයේ හෝ අැමෙරිකාවේ පමණක් නොව චීනය ඇතුළු සංවර්ධිත ආසියානු රටවල්වල පවා මේ තත්ත්වය හොදින් දැක ගත හැකි අතර එම රටවල ස්ත‍‍්‍රීන්ගේ ඇදුම්වල දිග මැනීමට පිරිමින් කාලය ගත කරමින් සිටින්නේ නැත.
සමාජ ගැටළු දෙස විවෘතව බැලිය හැකි දියුණු මානසික තත්ත්වයක් ගොඩ නැගෙන්නේද නිෂ්පාදනයක් කරන මිනිසුන්ගෙන් වන අතර මෙහිදී අප සෙල්වාටද අනුකම්පා කළ යුත්තේ කාන්තාවගේ ඊනියා ප‍‍්‍රචණ්ඩත්වයට ලක්වූ අර්ථයෙන් නොව රටක් ලෙස අපේ පවතින දුර්වලතාවයක් ඔහු මතින් දිග හැරුණ නිසාය. පාරේ ගහ ගැනීම හෝ ප‍‍්‍රචණ්ඩත්වය අපට අනුමත කළ නොහැකි වුවත් බහුතර ජාතිය සුළුතර ජාතියක් මත ප‍‍්‍රචණ්ඩත්වය පතුරවා ජයග‍‍්‍රහණය ලැබීම ජාතියේම ජයග‍‍්‍රහණයක් ලෙස පිළිගැනීමට බල කෙරෙමින් සිටින රටක කාන්තාවක් ප‍‍්‍රචණ්ඩත්වයෙන් තමන්ගේ ප‍‍්‍රශ්නයක් විසදා ගැනීම වැරදි වන්නේ කෙසේද යන්නත් අප ප‍‍්‍රශ්න කළ යුතුය.
නිෂ්පාදනය නැති නිසා හිස් වූ මනසක් ඇති පිරිමින් ආර්ථිකයෙන් රටට පැමිණෙන අලුත් ෆැෂන් නිසා බියවී සිටින අතර මේ දෙදෙනා බස් හෝල්ට් එකක මුණ ගැසුන විට ශරීර අතර ගැටුමක් ඇතිවේ. සංවාදය මේ පැත්තට අරන් යනවා වෙනුවට අපේ මෝඩ මාධ්‍යවේදීන් කරන්නේ ඊනියා සදාචාර මිනුම් දඩු වලින් විනිශ්චයන් දීමට යෑමයි. එම නිසා මේ සියළු දෙනාම පිළිබඳව අප අනුකම්පා කළ යුතුය. ජීසස් කීවාක් මෙන් අප මෙසේ කිව යුතුය. ‍ඔවුන් නොදැන කරන වැරදි වලට සමා වුව මැනව!

// வாரியபொல சகோதரியும் நாங்களும் \\
சமபிம (සමබිම) சிங்கள மொழி வலைத்தளத்திலிருந்து... (ஒரு பகுதி)
இச் சம்பவம் குறித்து விவரிப்பதற்கு பெண்ணியம், ஒழுக்கம், கல்வி போன்ற அளவுகோள்களை உபயோகிக்க முடியுமாக இருந்தாலும் இதனை பொருளாதாரப் பிரச்சினையாக விவரிப்பது பொருத்தமாகும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் தங்கியிருப்பது 'உற்பத்தி பொருளாதாரம்' மீது என்றால், அந் நாட்டின் பெண்கள் போன்று ஆண்களுக்கும் வேலையின்றிக் கழிப்பதற்கு நேரம் இருப்பதில்லை. அவர்கள் எப்பொழுதும் தமக்கும் சமூகத்திற்கும் உரிய பணிகளில் ஈடுபட்டிருப்பர். அதனால் உடைகளைப் பற்றி சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரமிருக்காது.
அதுபோல அவ்வாறானதொரு நாட்டில் பஸ் தரிப்பு நிலையங்களில் காரணமின்றி நேரத்தைக் கழித்தல் என்ற ஒரு விடயம் அப்போது ஏற்படாது. ஏனெனில் மனிதர்கள் பஸ் தரிப்பு நிலையங்களில் வெறுமனே நேரத்தைக் கழித்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு நட்டம் ஏற்படும் என்பதினாலாகும்.

அதுபோன்று பெண் உற்பத்திச் செயற்பாட்டுக்கு சரிசமனாகப் பங்களிப்பு வழங்க ஆரம்பிக்கும் போது ஆணிடம் பெண் தொடர்பாகக் காணப்படும் கேடுகள் கணிசமான அளவு நீக்கிவிடவேண்டி ஏற்படும். ஐரோப்பா, அமெரிக்கா மட்டுமன்று சீனா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த ஆசிய நாடுகளில் கூட இந்நிலையை நன்கு காணலாம். அந்நாடுகளில் பெண்களின் ஆடையின் நீளத்தை அளப்பதற்கு ஆண்கள் நேரத்தை செலவிட்டுக்கொண்டிருபப்தில்லை.

சமூகப் பிரச்சினைகளைத் திறந்த மனதுடன் பார்க்கக் கூடிய முன்னேற்றகரமான மனோ நிலை உருவாகுவதும் உற்பத்திச் செயற்பாட்டில் ஈடுபடும் மனிதர்களிடமிருந்துதான். இங்கு நாம் செல்வா (வாரியபொல சம்பவத்தின் ஆண்) மீது அனுதாபங்கொள்ள வேண்டியதும் பெண்ணொருத்தியின் வன்முறைக்கு ஆளானவன் என்ற அர்த்தத்தில் அல்ல, நாடு என்ற வகையில் நம்மிடம் நிலவும் பலவீனங்கள் அவன் ஊடாக வெளிப்பட்டதினால் ஆகும்.
வீதியில் சண்டை பிடிப்பதையோ வன்முறையையோ நாம் அனுமதிக்க முடியாது. பெரும்பான்மை இனம் சிறுபான்மை ஒன்றின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதை தேசத்தின் வெற்றியாக அங்கீகரிக்குமாறு நிர்ப்பந்திக்கும் நாடொன்றில், பெண்ணொருத்தி தனது பிரச்சினையொன்றை வன்முறையின் மூலம் தீர்த்துக்கொள்வது எப்படித் தவறாகும் என்பதையும் நாம் கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது.

உற்பத்தி இன்மையினால் வெறுமையாகிப் போன உள்ளங்களைக்கொண்ட ஆண்கள் பொருளாதாரத்தின் ஊடாக நாட்டுக்குள் நுழையும் புதிய பேஷன்களினால் அச்சமுற்றிருப்பதுடன் இவர்கள் இருவரும் பஸ் தரிப்பு நிலையமொன்றில் சந்திக்கும்போது உடல்களுக்கிடையில் மோதல் ஏற்படுகின்றது.
இக் கருத்தாடலை இத் திசையை நோக்கி நகர்த்துவதை விட்டுவிட்டு எமது முட்டாள் ஊடகவியலாளர்கள் செய்த காரியமும், ஒழுக்க அளவுகோள்களினால் தீர்ப்புக்களை வழங்க முற்பட்டதாகும்.

ஆகவே நாம் அனைவர் மீதும் அனுதாபங்கொள்ள வேண்டியுள்ளது. இயேசு நாதர் கூறியதைப் போன்று நாமும் கூறவேண்டியுள்ளது, 'அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பீர்!'


அக்ஸாவில் இருந்து ஒரு சிப்பாயின் மடல்..... Marikkar SACP


அக்ஸாவில் இருந்து ஒரு சிப்பாயின் மடல்.....
_____________________________________________

உலக முஸ்லீம்களே..
இஸ்லாம் என்ற - இரத்தத்தால்
இணைந்து நிற்கும்
உடன்பிறப்புகளே...
***
கடல் கடந்த – எங்கள்
கண்ணுக்குத் தெரியாத கரங்களே...
***
அக்ஸாவின் – ஆயுதப் பள்ளத்தாக்கிலிருந்து
இது - ஓர்
சிப்பாயின் மடல் !
***
அஸ்ஸலாமு அழைக்கும்
***
இங்கே நடப்பதை – நீங்கள்
வாசித்திருப்பீர்கள்...
***
உங்கள் கண்கள்
கலங்கியிருக்க கூடும்...
***
எங்கள் குழந்தைகளின் ரத்தம் !
உங்கள் வீடுவரைக்கும்
தெரித்திருக்கக் கூடும்...
***
கருகிய மலர்களை
கைகளில் அல்லும் – அந்தக்
கண்ணீர்
உங்களையும் சுட்டிருக்கும்...!
***
உலக முஸ்லீம்களே....
***

யூத ராணுவம் – எமது மண்ணை
விழுங்க
மீண்டும் அடியெடுத்தது !
***
நவீனமும் – நாய்களும்
பிடரி நக்க – எம்
வியர்வையை
மோப்பம் பிடித்தது...!
***
82 ஆயிரம் படை நிறுத்தி – எங்கள்
குடிசைகளைக்
குறிவைத்தது..!
***
261 பெண்கள் சிதற
102 வயோதிபர் வகுந்தெடுக்கப்பட
578 பிஞ்சுகள் நெஞ்சு பிளக்க
2000 உயிர்களை
இஸ்ரேல் – இன்று
தின்று முடித்தது...!
***
ஷஹீதுகள்...
சந்தோஷமாகப் போனார்கள்...
***
சுவனத்தின் சுவை
ரமழானில்
இன்னும் இனிமையானது...!
***
ஷஹீதுகள்...
சந்தோஷமாகப் போனார்கள்...
***
உலக முஸ்லீம்களே...
***
அவர்கள் மறித்தார்கள்..!
இல்லை – எங்கள்
நெருப்புக்கு வகுப்பெடுத்தார்கள்...!
***
அந்த - புன்னகைத்த
முகங்களில்
மின்சாரம் இருந்தது...!
***
இதோ - கல்புக்கு
கரண்ட் எடுத்துக் கொள்கிறோம்..!
***
பிடுங்கி எடுக்கமுடியாத
ஈமானிய ஆணிவேருடன்
போராடுகிறோம்...!
***
யஹூதிகள் இப்போது
ஓர்
புதிய எதிரியுடன்
மோதுகிறார்கள்...!
***
அவர்களின் – ஆச்சரியங்களுக்கு
அப்பால் - எங்கள்
தாக்குதல் நீண்டிருக்கிறது.. !
***
ஆளில்லா விமானம் – அங்கே
அதிர்ச்சி வைத்தியம் !
***
“ஜிகெம்” இன்
கடல்மார்க்கக் கதைமுடிப்பு – அவர்கள்
திரும்பிப்பார்த்த
திகில் அனுபவம்...!
***
Airport தொடும் ஏவுகணை
அங்கே
சர்வதேச நில நடுக்கம்...!
***
உள்ளூர் உளநோயும்
முகம் தெரியா
முதுகுக் கண்ணீரும் – இன்று
இஸ்ரேலின் காற்றில் கசிகிறது...!
***
அவர்களின் – ஆச்சரியங்களுக்கு
அப்பால் - எங்கள்
தாக்குதல் நீண்டிருக்கிறது.. !
***
வளையில் மாட்டிய
வௌவால்களின் ஓலம்...!
***
இது
இஸ்ரேலுக்குப் புதிது..!
***
எனவே
வட்ட மேசைக்கு
வந்து விழுந்திருக்கிறது !
***
இது
யுத்த நிறுத்தமல்ல !
பேய்களின் – ஓய்வு காலம் !!
***
ஆம்
மாலைதீவின்
மறுப்பு !
***
மொரோக்கோ
அதிபரின் சத்தம் !
***
பொலீவியா
கிழித்தெறிந்த சட்டம்..!
***
வீதியில் வீசப்பட்ட
இஸ்ரேலிய விருதுகள்...!
***
இராஜினாமா
செய்யப்பட்ட – இங்கிலாந்தின்
பதவிகள் !
***
பறக்க மறுத்த – அமெரிக்க
ஆகாய விமானங்கள்... !
***
முற்றுகையில் கிழிபட்ட
BBC
முகமூடிகள் !
***
“Ronaldo !” – ஒரு
கால்பந்தாட்ட வீரனின்
கருத்தில் சிவத்த
தங்கக் காலணிகள்...!
***
உலகின் – தலை நகரை
உசுப்பிய
மனித – உணர்வுகளின்
உயிரலைகள்... !
***
இந்த Gaza வின் வெற்றிகள்...,
இந்த Gaza வின் வெற்றிகள்...,
***
இஸ்ரேலின்
கறுப்பு மூளையில்
ஆணி அடித்தது !
***
விஷத்தின்
வீரியம் குறைத்தது... !
***
வட்ட மேசைக்கு
வந்து விழ வைத்தது !
***
தெரியும்...
இது
யுத்த நிறுத்தமல்ல...
பேய்களின் ஓய்வுகாலம் !
***
உலக முஸ்லீம்களே...
***
எனினும் – இந்த
தற்கால வெற்றி – எம்மைத்
தரப்படுத்தும் !
***
அகளி யுத்தத்தை – இன்னும்
ஆழப்படுத்தும் !
***
சுரங்கங்கள்
சுரக்கும் !
***
எங்கள் ஆயுதப் பள்ளத்தாக்கில்
புதிய
மனித மலர்க் கன்றுகள்
பூக்கும் !
***
ஏவப்படாத ஏவுகணைகள் – மீண்டும்
அறிமுகமாகும் !
***
ஆச்சரியங்கள்
காத்திருக்கும்...!
***
தாய்ப்பால்
தக்க பலத்தோடு
சாராயத்தை சந்திக்கும்.. !
***
அது – பாலஸ்தீனின்
விடுதலையை
விரைவாக்கி எழுதும் !
***
உலக முஸ்லீம்களே..
இஸ்லாம் என்ற - இரத்தத்தால்
இணைந்து நிற்கும்
உடன்பிறப்புகளே...
***
சில
கடைசி வரிகளோடு - இந்தக்
கடிதத்தை
முடித்துக்கொள்கிறேன்...
***
உலக முஸ்லீம்களே...
அல்லாஹ் – உங்களுக்கு
அருள் செய்வானாக...
***
நாங்கள்
நெருப்பில் நின்றபோது
நீங்கள்
நெருங்கி வந்தீர்கள்...
***
உங்கள் குழந்தைகளின்
பால்மாக்களைப்
பகிர்ந்து கொண்டீர்கள்...
***
உங்கள் Panadol களால்
எங்கள்
தலைவலி தடவினீர்கள்...
***
பாங்கோசை கேட்டதும்
மஸ்ஜிதின்
கதவு திறந்தோடி – எமக்காக
அல்லாஹ்வைச் சந்தித்தீர்கள்...
***
களத்திலே...
எங்கள் சட்டைப் பைகளில்
உங்கள்
ரோஜாக்கள் இருந்தன...
***
நீங்கள்
இணைந்து கொண்ட போது
எங்கள் நிலம்
விசாலமானது...
***
உங்கள் ரமழான்
எங்கள்
ஆயுதக் கிடங்காக இருந்தது...!
***
உங்கள் குனூத்தில்
நாங்கள்
இருந்தோம்...
***
உங்கள் சுஜூதில்
நாங்கள்
சிவந்தோம்...!
***
உங்கள் உறவுக்கரம்
எம்மைத் தொட்டது...!
***
அந்த ஈமானிய ஸ்பரிசம்...
எங்கள்
மரணித்த தாயை
மனக்கண்ணில் தந்தது...!
***
உங்கள் துஆக்களைத் தாண்டி
பெரியதோர் ஆயுதம்...
Gazzam இடம்
இருந்ததில்லை !
***
இன்ஷா அல்லாஹ்
இஸ்ரேல் – ஓர் நாள்
முடியும் !
***
இந்த மண்ணுக்கான
தீர்ப்பு
திருத்தி எழுதப்படும் !
***
குத்ஸ் இன்
மினாராக்களில் – எங்கள்
கீதப்பறவைகள்
கூடுகட்டும்..!
***
அன்று...
அக்ஸாவின் அதான்
அழாமல் ஒலிக்கும்...
***
அதுவரைக்கும்
நிறுத்தாது பிரார்த்தியுங்கள்...
***
எங்கள்..- தூரத்துத்
தூண்கலாய் இருங்கள்...
***
உலக முஸ்லீம்களே..
இஸ்லாம் என்ற - இரத்தத்தால்
இணைந்து நிற்கும்
உடன்பிறப்புகளே...
***
கடல் கடந்த – எங்கள்
கண்ணுக்குத் தெரியாத கரங்களே...
***
விடை பெறுகிறேன்....
***
அன்புடன்,
அக்ஸாவின் பள்ளத்தாக்கிலிருந்து
இஸ்லாமியச் சகோதரன்.