குனூத் அந்நாஸிலாவை நிறுத்திக் கொள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எடுத்த திடீர் முடிவும் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனமும்! U.H. Hyder Ali
அண்மைக்காலமாக இலங்கையில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத அடக்குமுறைகளில் இருந்தும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்புத் தேடி இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் தங்களது மத சம்பிரதாயமுறைப்படி இறைவனிடமே பாதுகாப்பு தேடினார்கள்.
ஆபத்தான நிலைமைகளில் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குனூத் அந்நாஸிலாவை ஓதி வந்தார்கள். அதன் அடிப்படையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன நிலமையைக் கவனத்திற்கொண்டு இலங்கையில் உள்ள முஸ்லிம்களினது பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஐவேளை தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதிவந்தார்கள்.
அதே நேரத்தில், சுன்னத்தான நோன்புகளையும் நோற்று பாதுகாப்பு தேடினார்கள் என்பது நாம் யாவரும் அறிந்த விடயம்.
இது இவ்வாறு இருக்க, சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைக்காக அண்மையில் இலங்கை வந்திருந்த அமெரிக்காவில் வசிக்கும் ஜனாதிபதியின் சகோதரர் டட்லி ராஜபக்ஷவுடன் மருத்துவ பரிசோதனைக்காக ஜனாதிபதி நேற்று முன்தினம் காலை அவசரமாக கொழும்பில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து உலங்கு வானூர்தி ஒன்றில் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுஇ அங்கிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் வெளிநாடுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாத நோய் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தை அரசாங்கம் மிகவும் இரகசியமாக பேணிவருகிறது.
அதே நேரத்தில், பணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளர் சுதத் சில்வாஇ ஜனாதிபதியிடம் மீண்டும் நெருங்கி வர அண்மையில் மேற்கொண்ட யாகம் காரணமாக ஜனாதிபதி திடீரென சுகவீனமுற்றுள்ளதாக ஜனாதிபதியின் செயலக தகவல்கள் தெறவிக்கின்றன.
சுதத் சில்வா மேற்கொண்ட மோசடிகள் பற்றி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்து ஜனாதிபதிஇ அவரை ஒதுக்கி வைத்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் சந்தித்து விளக்கமளிக்க பல முறை முயற்சித்த போதிலும் ஜனாதிபதிஇ சுதத் சில்வாவை சந்திக்கவில்லை. ஜனாதிபதியின் இந்த பதிலால்இ பீதியடைந்துள்ள சுதத் சில்வாஇ நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபலமான மந்திரவாதியின் மூலம் ஜனாதிபதியை மீண்டும் வசியப்படுத்தும் நோக்கில் பெருந் தொகை பணத்தை செலவு செய்துஇ யாகம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த யாகம் நடத்தப்பட்டு ஓரிரு தினங்களில்இ ஆரோக்கியமாக இருந்த ஜனாதிபதி திடீரென சுகவீனமடைந்துள்ளார். சுதத் சில்வாவின் யாகம் காரணமாகவே ஜனாதிபதிக்கு இந்த திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகையில் பேசப்பட்டு வருகிறது.
இந்த சம்பவங்களை கேள்வியுற்று பதற்றமடைந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உடனடியாக இன்று ஒரு அறிக்கையை விட்டு குனூத் அந்நாஸிலா ஓதுவதை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறது. சுகத்சில்வாவின் யாகம் ஜனாதிபதிக்கு பளித்தைப் போல் குனூத் அந்நாஸிலாவும் ஜனாதிபதியின் சுகயினததுக்கு காரணம் என்றும பேசப்படுகிறது. ஹலால் விடயத்திலும் குனூத் அந்நாஸிலா ஒதுவதை அரச தரப்பின் வேண்டுதலுக்கு இனங்க இதற்கு முன்பும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஓதவேண்டாம் என்று கூறியதையும் நாம் அறிவோம்.
அல்லாஹ்வின் அடியார்கள் தங்களுக்கு பிரச்சினைகள் எழும் போது இறைவனை மாத்திரமே நம்பி அவனிடம் தான் பிரார்த்திப்பார்கள். குனூத் அந்நாஸிலா ஜனாதிபதியை பாதித்துவிட்டதோ என்ற சந்தேகத்துக்கு அஞ்சி, அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதை கூட தடை செய்யும் அளவுக்கு கீழ்தரமான நிலைக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தள்ளப்பட்டிருக்கிறது . இறைவனிடம் பிரார்த்திப்பதைக்கூட ராஜபக்சச குடும்பம்துக்கு அஞ்சி தடுக்க முயலுவது வெட்கத்துக்குறியது வேதனைக்குறியது கண்டிக்கத்தக்கது.
No comments:
Post a Comment