எகிப்திய
மக்களின்
எழுச்சி!!
முபாரக்
முதல்
முர்ஸி
வறை
யு.எச்
ஹைதர்
அலி
1
எகிப்திய
புரட்சியை ஒரே
வாக்கியத்தில்
குறிப்பிட
வேண்டுமென்றால்,
'மக்கள்
புரட்சியில்
எகிப்து
பற்றி
எரிகிறது'
என்றுதான்
சொல்ல
வேண்டும்.
முபாரக்
முதல்
முர்ஸி
வறை
எகிப்தில்
இப்படி
யேல்லாம்
நடக்கும்
என
ஏகாதிபத்தியங்கள்
முன்பே
கணித்திருந்ததோ
இல்லையோ
அதை
நிச்சயம்
விரும்பவில்லை.
தங்களால்
முடிந்தவரை
புரட்சி
வராமல்
பார்த்துக்
கொள்ள
எவ்வளவோ
முயற்சித்தன.
கலகமாகவும்,
சின்ன
எழுச்சியாகவும்
மறைத்து
மூடிவிட
முயன்றன.
ஆனால்,
ஒன்றிணைந்த
மக்களின்
தொடர்
போராட்டமும்,
சலிப்படையாத
எழுச்சியும்
புரட்சிக்கான
கருவை
எகிப்தில்
விதைத்துவிட்டன.
ஏனெனில்
எகிப்தில்
இன்றைய
தினம்
போராடுபவர்கள்,
கூலிகள்,
வேலையில்லா
பட்டதாரிகள்,
கல்லூரி
படிக்கும்
மாணவ
– மாணவிகள்.
மொத்தத்தில்
அடித்தட்டு
உழைக்கும்
மக்கள்தான்
எகிப்தில்
90%
வாழ்கிறார்கள்.
இந்த
மக்களின்
உணர்வைத்தான்
எகிப்து
மக்களிடம்
2011 ஜனவரி
25ஆம்
தேதி
முதல்
நடந்து
வரும்
மக்கள்
எழுச்சி
ஏற்படுத்தியிருக்கிறது.
எகிப்திய
மக்கள்
2011 ஜனவரி
25ஆம்
தேதி
அன்று
அணிதிரண்டு
தங்கள்
எதிர்கால
பயணத்துக்கான
முதல்
அடியை
எடுத்து
வைத்ததை
நாம்
யாவரும்
அறிவோம்.
இப்
போராட்டம்
ஆட்சி
மாற்றம்,
அல்லது
அரசாங்க
மாற்றம்
என்ற
அச்சம்
பலர்
மத்தியில்
தோன்றியது
எகிப்தின்
போராட்டம்
விரைவிலேயே
அல்லது
தாமதமாகவோ
அடிப்படையான
சமூக
மாற்றத்தை
நோக்கி
சென்றாலும்
செல்லலாம்
என்ற
உண்மை
அமெரிக்காவை
பிடித்திருந்தது.
இந்த
உண்மையை
சற்று
தாமதமாக
புரிந்து
கொண்ட
அமெரிக்க
ஏகாதிபத்தியம்,
அடுத்தகட்ட
நடவடிக்கைகளில்
இறங்கிவிட்டது.
அதன்
விளைவாக
2011 தொடக்கம்
வெள்ளை
மாளிகை
முன்பைவிட
பரபரப்பாக
இயங்கிக்
கொண்டிருக்கிறது.
தொலைபேசிகள்
ஓயாமல்
மத்திய
கிழக்கு
நாடுகளை
தொடர்பு
கொண்டபடியே
இருக்கின்றன.
அந்தந்த
நாட்டு
அதிபர்,
மன்னர்களுடன்
விடாமல்
உரையாடிக்
கொண்டிருக்கின்றன.
யேமன்இ
துருக்கி,
ஜோர்டான்,
அல்ஜீரியா,
சவூதி
அரேபியா
ஆகிய
நாடுகளிலும்
அடுத்தடுத்து
மக்கள்
எழுச்சி
ஏற்படலாம்
என்ற
அச்சம்,
அமெரிக்காவின்
சாம்ராஜ்ஜியத்தில்
காய்ச்சலை
ஏற்படுத்தியிருக்கிறது.
அதை
தடுப்பதற்கான
– தணிப்பதற்கான
– நடவடிக்கைகளிலும்
இறங்கியிருக்கிறது.
இதன்
ஊடாக
அமெரிக்கா,
இங்கிலாந்து
உட்பட
அனைத்து
ஏகாதிபத்திய
நாடுகளும்
எகிப்தை
ஒட்டி
தங்கள்
நிலைப்பாட்டை
பகிரங்கமாக
அறிவித்துவிட்டன.
ஜனநாயகத்துக்கு
எதிராக,
மக்கள்
உணர்வுக்கு
முரணாக,
சர்வாதிகாரத்துக்கு
மறைமுக
ஆதரவாக
நாங்கள்
இருக்கிறோம்
என்பதை
உலக
மக்களுக்கு
தெளிவுபடுத்தி
விட்டார்கள்.
எகிப்து
நிகழ்வுகளை
ஏகாதிபத்தியங்கள்
அணுகுவதிலிருந்தே
இதை
புரிந்து
கொள்ளலாம்.
உண்மையில்
எகிப்தின்
மக்கள்
எழுச்சியை,
'மேட்
இன்
அமெரிக்கா'
(Made
in America) என்று
பறைசாற்றத்தான்
அமெரிக்கா
விரும்பியது.
2011 ஜனவரி
மாத
நடுப்பகுதியில்
வட
ஆப்பிரிக்க
தேசமும்இ
எகிப்துக்கு
அருகாமையில்
இருக்கும்
நாடுமான
துனிசியாவில்
மக்கள்
கிளர்ந்து
எழுவதற்கு
முன்பே
- எகிப்தில்
மக்கள்
ஆர்ப்பாட்டத்தில்
இறங்கலாம்
என்று
அமெரிக்கா
கணித்திருந்தது.
கடந்த
சில
ஆண்டுகளாகவே
எகிப்தின்
நிலை
சரியாக
இல்லை.
ரோமர்களின்
காலத்தில்
பண்டைய
எகிப்து,
ஐரோப்பாவின்
உணவுக்களஞ்சியமாக
விளங்கியது.
அப்படிப்பட்ட
உணவுக்
களஞ்சியமாக
எகிப்து
இன்று
இல்லை.
உலகமயம்,
தாராளமயம்
என
மறுகாலனியாதிக்க
கொள்கைகள்
எகிப்தை
நாசம்
செய்துவிட்டன.
அத்தியாவசிய
உணவுப்பொருட்களின்
விலையேற்றம்,
வேலையில்லா
பிரச்னை,
வருமானக்
குறைவு,
விலைபோகும்
கல்வி
என
மக்களை
வாட்டும்
பிரச்னைகளே
அரசாங்கத்தின்
கருவூலத்தில்
இன்று
நிரம்பி
வழிகின்றன.
அரபு
தொழிலாளர்
அமைப்பின்
(ALO)
சமீபத்திய
தேசிய
கருத்தரங்கில்
வெளிவந்த
புள்ளிவிவரங்கள்
இதை
தெளிவாக
படம்பிடித்து
காட்டுகின்றன.
எகிப்து
மக்களிடையே
காணப்படும்
சமூக
நிலைமைகள்
மிக
மோசமாக
உள்ளன
என்றும்,
நாள்
ஒன்றிற்கு
2 டாலருக்கும்
குறைவான
பணத்தில்
வாழ்க்கை
நடத்துபவர்களின்
எண்ணிக்கை
40
சதவிகிதத்திற்கும்
மேலாக
இருக்கிறது
என்றும்
அந்த
விவரங்கள்
முகத்தில்
அறைகின்றன.
அதாவது
8.5 கோடி
மக்கள்
வாழும்
எகிப்தில்
கிட்டத்தட்ட
43 சதவிகிதத்தினர்
வறுமையில்
வாழ்கின்றனர்.
அதேபோல்
உலகளவில்
மனித
உரிமை
மீறல்களும்,
சித்திரவதைகளும்,
காவல்நிலையத்தில்
நடக்கும்
படுகொலைகளும்
அதிகமாக
நடைபெறும்
நாடுகளில்
எகிப்தும்
ஒன்று.
ஃfபேஸ்
புக்
மூலம்
மக்கள்
எழுச்சியை
ஏற்படுத்தியவர்கள்
யார்
?
டிவிட்டர்
தளத்திலும்
கால்
பதித்தார்கள்.
ப்ளாக்
என்னும்
வலைத்தளங்களையும்
தனித்தனியே
உருவாக்கினார்கள்.நாட்கள்
செல்லச்
செல்ல
அரசாங்கத்துக்கு
எதிரான
தளமாக
'ஏப்ரல்
6 இயக்கம்'
உருவாகியது.
எந்தக்
கட்சியையும்
சார்ந்தவர்களாக
இவர்கள்
முன்னிறுத்திக்
கொள்ளாதது
இவர்களின்
பலமாயிற்று.
எல்லாக்
கட்சிகளையும்
பார்த்து
மக்கள்
சலித்திருந்தார்கள்
என்பதுதான்
இவர்களது
கட்சி
சார்பற்ற
பலத்தின்
அடிப்படை.
அதே
நேரம்
இந்த
இளைஞர்கள்
முபாரக்கை
மாற்ற
வேண்டும்
என்பதைத்
தாண்டி
வேறு
காத்திரமான
அரசியல்,
சமூக
மாற்றத்தை
கோரியவர்கள்
அல்ல
என்பதையும்
நாம்
நினைவில்
கொள்வது
நல்லது.
இதை
மோப்பம்
பிடித்த
அமெரிக்கா,
ஃபேஸ்
புக்கிலும்,
வலைத்தளங்களிலும்
(ப்ளாக்)
துடிப்புடன்
இயங்கும்
சில
இளைஞர்களை
தங்கள்
செலவில்,
தங்கள்
நாட்டுக்கு
அழைத்து
இணையதள
தொழில்நுட்பங்களை
பயிற்றுவித்தது.
ஹிலாரி
கிளிண்டன்
போன்றவர்கள்
கூட
இவர்களுடன்
சில
மணி
நேரங்களை
செலவிட்டார்.
எகிப்தில்
என்ன
மாதிரியான
மாற்றங்கள்
உருவாக
வேண்டும்
என்பது
குறித்த
கலந்துரையாடல்
இச்சந்திப்பின்
ஹைலைட்டாக
அமைந்தது.
அதாவது,
கம்யூனிசம்
கூறுவது
போன்ற
அடிப்படை
சமுகத்தை
மாற்றும்
புரட்சி
சார்பாக
இளைஞர்கள்
சென்றுவிடக்
கூடாது
என்பதில்
அமெரிக்கா
குறியாக
இருந்தது.
அரசு
மாற்றமல்ல;
ஆட்சி
மாற்றமே
தேவை
என்பதான
கருத்துக்கு
அந்த
இளைஞர்கள்
குழு
வந்ததும்
– வர
வைத்ததும்
– எகிப்துக்கு
அவர்கள்
திருப்பி
அனுப்பப்பட்டார்கள்.
முபாரக்கை
ஆதரித்த
அமெரிக்கா
அவரை
மாற்றுவதையும்
ஏன்
ஆதரிக்க
வேண்டும்
என்பதில்
பெரிய
முரண்பாடு
ஏதுமில்லை.
முடிந்த
வரை
முபாரக்,
அவர்
போய்விட்டால்
தனக்கு
விசுவாசியான
அடுத்த
நபர்
என்பதுதான்
அமெரிக்காவின்
விருப்பம்
மற்றும்
நடைமுறை.
இதனால்
உலகமெங்கும்
உள்ள
மக்கள்
போராட்டங்களை
காயடித்து
ளாகர்கள்
இந்த
நிகழ்வு
படித்த
– குறிப்பாக
இணையதள
பயன்பாடுள்ள
– எகிப்து
மக்களுக்கு
உத்வேகத்தை
ஏற்படுத்தியது.
இதனால்
ஆத்திரமடைந்த
எகிப்து
இளைஞர்கள்,
ஜனவரி
25ம்
தேதியை
ஆர்ப்பாட்டத்துக்கான
நாளாக
'ஏப்ரல்
6 இயக்க'த்தின்
தளமான
'ஃபேஸ்
புக்'கில்
அறிவித்தார்கள்.
ஜனவரி
25ம்
தேதியை
போலீசுக்கு
எதிரான
நாளாக
அவர்கள்
தேர்ந்தெடுத்ததற்கு
காரணமிருக்கிறது.
அன்றுதான்
ஆண்டுதோறும்
எகிப்தில்
'போலீஸ்
தினம்'
கடைப்பிடிக்கப்படுகிறது.
தவிர,
அன்று
தேசிய
விடுமுறையும்
கூட.
எனவேதான்
காவலர்களுக்கான
நாளில்,
காவலர்களுக்கு
எதிரான
ஆர்ப்பாட்டத்தை
கடைப்பிடிக்க
முடிவு
செய்தார்கள்.
இதற்கு
மக்களிடம்
பெருமளவு
ஆதரவு
கிடைத்தது.
எதிர்க்
கட்சிகளும்
இந்த
ஆர்ப்பாட்டத்தில்
களமிறங்க
முடிவு
செய்தன.
ஆனால்,
'துனிசிய
மாதிரி'யாக
இல்லாமல்,
ஆட்சி
மாற்றமாக
இது
நடைபெற
வேண்டும்
என
திரும்பத்
திரும்ப
வலியுறுத்தினார்கள்.
அதற்கேற்ப
'மாற்றீட்டு
பாராளுமன்றம்'
என்கிற
'மக்கள்
பாராளுமன்றத்தை'
முன்னிலைப்படுத்தினார்கள்.
அதாவது
எதிர்க்
கட்சிகளை
சேர்ந்த
அனைத்து
உறுப்பினர்களும்
பாராளுமன்றத்தில்
பங்கேற்கும்
விதமாக
அந்த
அறிக்கை
இருந்தது.
உஷாரான
ஹுஸ்னி
முபாரக்,
ஜனவரி
25 அன்று
காவலர்களை
எகிப்து
முழுக்க,
அனைத்து
நகரங்களிலும்
ஆயுதங்களுடன்
நிறுத்தினார்.
எந்த
காவலருக்கும்
அன்று
விடுமுறை
தரப்படவில்லை.
விடுமுறையில்
இருந்தவர்களும்
கட்டாயமாக
பணிக்கு
அழைக்கப்பட்டார்கள்.
விபரீதத்தை
உணர்ந்த
அமெரிக்க
ஏகாதிபத்தியமும்,
இந்தப்
போராட்டம்
அரசுக்கு
எதிராக
செல்லாதபடியும்,
ஆட்சிக்கு
எதிராக
மட்டுமே
இருக்கும்படியும்
தனது
இணையதள
விசுவாசிகள்
மூலம்
பார்த்துக்
கொண்டது.
ஒருவேளை
மக்கள்
எழுச்சி
நூறு
சதவிகிதம்
இருந்தால்,
முபாரக்கை
பதவியிலிருந்து
இறக்கிவிட்டு
வேறு
நபரை
ஆட்சியில்
அமர்த்தலாம்.
அதன்
மூலம்
எகிப்து
மக்களின்
கொந்தளிப்பை
மட்டுப்படுத்தி,
மக்கள்
எழுச்சியை,
'மேட்
இன்
அமெரிக்கா'
(Made
in America) ஆக
மாற்றலாம்
என
கணக்குப்
போட்டது.
ஆனால்,
அது
தப்புக்
கணக்காகிவிட்டது.
தனித்தனியாக
மக்கள்
சிதறி
இருக்கும்வரைதான்
ஏகாதிபத்தியம்
வெற்றி
பெறும்.
அதுவே
மக்கள்
திரளாக
அவர்கள்
ஒன்றிணைந்துவிட்டால்
எப்படிப்பட்ட
சூப்பர்
பவர்
ஏகாதிபத்தியமும்
தவிடு
பொடியாகிவிடும்.
இந்த
புரட்சிக்கான
விதையை
நடைமுறையிலிருந்து
கற்றுக்
கொண்ட
எகிப்து
மக்கள்,
மீண்டும்
அதையே
நடைமுறையாக்கினார்கள்.
நகரம்
முழுக்க
காவலர்கள்
ஆயுதங்களுடன்
நிரம்பியிருந்தது
அவர்களது
கொந்தளிப்பை
அதிகரித்தது.
தனித்தனியாக
இருக்கும்வரைதானே
பயம்?
ஒன்றாக
சேர்ந்து
சாலையில்
இறங்கினால்...
இறங்கினார்கள்.
மெல்ல
மெல்ல
முன்னேறினார்கள்.
1977ல்
நடந்த
ரொட்டி
எழுச்சிக்குப்
பின்,
எகிப்தில்
பேரணி
நடத்தவும்
ஆர்ப்பாட்டம்
நடத்தவும்
சட்டப்படி
தடை
விதிக்கப்பட்டிருந்தது.
அந்தச்
சட்டத்தை
மக்கள்
மீறினார்கள்.
விளைவு...
30 ஆண்டுகளாக
எகிப்து
கண்டிராத
மக்கள்
போராட்டத்தை
– எழுச்சியை
– அன்றைய
தினம்
கண்டது.
எந்த
காவலர்களை
பார்த்து
இத்தனை
ஆண்டுகளாக
பயந்து
நடுங்கினார்களோ...
அதே
காவலர்கள்
முன்பு
தைரியமாக
தடையை
மீறினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில்
கலந்து
கொண்டவர்களில்
பெரும்பான்மையினர்
30
வயதுக்குட்பட்டவர்கள்.
இதற்கு
முன்பு
எந்த
அரசியல்
போராட்டத்திலும்
கலந்து
கொள்ளாதவர்கள்.
எந்தக்
கட்சியின்
உறுப்பினர்களாகவும்
இல்லாதவர்கள்.
அதுமட்டுமல்ல,
தங்கள்
வாழ்நாளில்
எந்தவொரு
மக்கள்
எழுச்சியையும்
அவர்கள்
கண்ணால்
பார்த்ததும்
இல்லை.
எந்த
மத
அமைப்பும்
அம்மக்களை
வழி
நடத்தவில்லை.
தொழிலாளர்களும்,
வேலையில்லா
பட்டதாரிகளும்,
அடித்தட்டு
உழைக்கும்
மக்களும்தான்
இந்த
எழுச்சியை
வழிநடத்தி
இருக்கிறார்கள்.
சுதந்திரத்தின்
சுவையை
மட்டுமல்ல,
கூட்டிணைவின்
மகிழ்ச்சியையும்
அன்றைய
தினம்
எகிப்து
மக்கள்
யாரும்
கற்றுத்
தராமலேயே
உணர்ந்தார்கள்.
காவலர்களின்
துப்பாக்கி
சூட்டுக்கு
ஆங்காங்கே
மக்கள்
பலியானபோதும்
ஆர்ப்பாட்டத்தை
அவர்கள்
நிறுத்தவும்
இல்லை.
சிதறி
ஓடவும்
இல்லை.
அலெக்சாந்திரியா
நகரில்
வயதான
பெண்கள்,
வீட்டு
பால்கனியில்
நின்றபடி
அழுகிய
தக்காளிகளையும்,
கல்லையும்
காவலர்கள்
மீது
வீசினார்கள்.
இப்படியாக
ஜனவரி
25 ஆர்ப்பாட்டம்,
ஒட்டுமொத்த
எகிப்து
மக்களின்
எழுச்சியாக
உருவெடுத்தது.
வரலாறு
முழுக்கவே
மக்கள்
திரள்
ஒன்றிணைந்து
இதுநாள்
வரை
தங்களை
பிணைத்திருந்த
அச்சம்
என்னும்
சங்கிலியை
அறுத்து
எறியும்போது,
பூமிப்
பந்திலுள்ள
எந்த
ஆற்றலும்
– சக்தியும்
– அவர்களை
கட்டுப்படுத்த
முடியாமல்
பின்
வாங்குகிறது
என
பதிவு
செய்திருக்கிறது.
அந்தப்
பதிவு
மீண்டும்
எகிப்து
வரலாற்றில்
எழுதப்பட்டது.
ஃபேஸ்
புக்இ
டிவிட்டர்,
ப்ளாக்...
என
இணையத்திலுள்ள
சகல
வலைத்தளங்களிலும்
இளைஞர்கள்
போராட்டத்தை
குறித்து
விவாதித்தார்கள்.
26 பக்க
போராட்ட
வழிமுறைகள்
பிடிஎஃப்
ஆக
மின்னஞ்சலில்
சுற்றுக்கு
விட்டார்கள்.
படித்தவர்கள்
அதை
தெரிந்தவர்களுக்கு
எல்லாம்
ஃபார்வர்ட்
செய்தார்கள்.
மத்திய
கிழக்கு
நாடுகளின்
தளப்
பிரதேசமாக
எகிப்தை
'நிர்வாகம்'
செய்து
வரும்
அமெரிக்கா,
இந்த
மக்கள்
எழுச்சியால்
கவலையடைந்தது.
இஸ்ரேலுக்கு
அடுத்தபடியாக
இராணுவ
தளவாடங்களை
அதிகளவு
அமெரிக்கா
விற்பது
எகிப்துக்குத்தான்.
அந்நாட்டில்
இருக்கும்
சூயஸ்
கால்வாய்,
அமெரிக்காவின்
வணிகத்துக்கு
தேவை.
அத்துடன்
இஸ்ரேலினால்
பொருளாதார
தடை
விதிக்கப்பட்டிருக்கும்
பாலஸ்தீனியர்களின்
காசா
பகுதி,
சூயஸ்
கால்வாயை
ஒட்டியே
இருக்கிறது.
எனவே
எக்காரணம்
கொண்டும்
எகிப்தை
இழக்க
அமெரிக்கா
தயாராக
இல்லை.
அதேபோல்
பாலஸ்தீனியர்களை அடக்கவும்,
அரபு
நாடுகளை மிரட்டவும் இஸ்ரேலுக்கு
தனது அண்டை நாடான எகிப்தின்
துணை தேவை.
எனவே
எகிப்துடன் ஈருடல் ஓருயிர்
என்ற நட்பையே இஸ்ரேல் கடைபிடித்து
வருகிறது.
எனவே
கேந்திர முக்கியத்துவம்
வாய்ந்த எகிப்து தங்கள் கையை
விட்டு போகாமல் இருக்க,
அமெரிக்காவும்,
இஸ்ரேலும்
தங்கள் விசுவாசியும்,
நீண்ட
ஆண்டுகள் நண்பருமான ஹுஸ்னி
முபாரக்கை கை கழுவி விட்டனர்.
அதன்
பலனாக எகிப்தின் முக்கிய
எதிர்க் கட்சித் தலைவரும்,
நோபல்
பரிசு பெற்ற சர்வதேச அணுசக்தி
முகமையின் முன்னாள் தலைவருமான
எல்பரதேய் ஊடகங்களால்
முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இவர்இ
துனிசிய புரட்சி நடந்த ஈரம்
காய்வதற்குள் 'கார்டியன்'
இதழுக்கு,
'எகிப்தும்
ஒரு
துனிசிய
வகையிலான
வெடிப்பை
எதிர்நோக்கியிருக்கிறது'
என்று
எச்சரித்தவர்தான்.
கூடவே
'துனிசிய
முன்மாதிரி
போல்
அல்லாமல்,
ஒழுங்கான
முறையில்
மாற்றம்
வரும்
என்று,
தான்
நம்புவதாகவும்,
இருக்கும்
முறையில்
இருந்தே
மாற்றத்தைக்
கொண்டு
வருவதற்கான
தேவையான
வழிவகைகள்
இந்நிலையில்தான்
வெள்ளிக்கிழமை
(28.01.2011)
விடிந்தது.
அன்றைய
தொழுகை
முடிந்ததும்
அதிபருக்கு
எதிரான
கோஷங்களை
எழுப்பியபடி
மக்கள்,
சாலையில்
இறங்கி
ஊர்வலம்
போக
ஆரம்பித்தார்கள்.
அதிபர்
மாளிகையை
முற்றுகையிட்டார்கள்.
நகரங்களில்
இருந்த
ஆளுங்கட்சி
அலுவலகம்
தீக்கரையானது.
அரசியல்
கைதிகள்,
சிறைச்சாலையை
கைப்பற்றி
வெளியே
வந்தார்கள்.
அரசாங்கமும்
சும்மா
இருக்கவில்லை.
குற்றவாளிகளை
விடுதலை
செய்து,
மக்களின்
உடமைகளை
திருடச்
சொன்னது.
சீருடை
அணிந்த
காவலர்களில்
சிலரும்
இந்த
வழிப்பறியில்
– கொள்ளையில்
இறங்கினார்கள்.
மக்கள்
அவர்களை
கைது
செய்தார்கள்.
தங்களுக்குள்ளாகவே
குழுவை
அமைத்து
தங்கள்
உடமைகளை
கையில்
கிடைத்த
ஆயுதங்களைக்
கொண்டு
பாதுகாத்துக்
கொண்டார்கள்.
2011
ஜனவரி
31ம்
தேதி
முடிய
பொது
மக்களுக்கும்
பாதுகாப்பு
வீரர்களுக்கும்
இடையே
நடந்த
மோதலில்
150 பேர்
பலியாகியுள்ளனர்.
4 ஆயிரம்
பேர்
காயமடைந்துள்ளனர்.
இது
அறிவிக்கப்பட்ட
கணக்கு
மட்டுமே.
பலியானோர்
எண்ணிக்கை
இன்னமும்
அதிகமாக
இருக்கக்
கூடும்.
என்றாலும்,
இந்த
எண்ணிக்கை
எந்தவிதத்திலும்
எகிப்து
மக்களின்
போராட்ட
உணர்வை
மழுங்கடிக்கவில்லை.
பலியானோரின்
சடலத்தையே,
உணர்வெழுச்சிக்கான
ஆயுதமாக
மக்கள்
பயன்படுத்த
ஆரம்பித்துவிட்டார்கள்.
காயமடைந்தோரும்,
ரத்தம்
வழிய
வழிய
ஆர்ப்பாட்டத்தில்
கலந்து
கொள்கிறார்கள்.
நாள்தோறும்
அலைகடலென
திரண்டு
வரும்
மக்களை
கட்டுப்படுத்த
வழியின்றி
பாதுகாப்புப்
படை
திகைத்து
நிற்கிறது.
ஆனால்,
முன்னாள்
விமானப்படை
அதிகாரியான
ஹுஸ்னி
முபாரக்கால்
இதை
பார்த்துக்
கொண்டு
சும்மா
இருக்க
முடியவில்லை.
தரைப்படை
அமைதிகாத்தால்
என்ன...
விமானப்படையை
அனுப்புகிறேன்...
மக்கள்
பயத்துடன்
கலைந்து
செல்வார்கள்
என
போர்
விமானங்களை
நகரங்களின்
மீது
பறக்க
விட்டிருக்கிறார்.
முதலில்
அதிர்ந்த
மக்கள்,
பிறகு
இந்த
போர்
விமானங்களை
ரசிக்க
ஆரம்பித்துவிட்டார்கள்.
'முதலில்
நாங்கள்
பயந்தோம்.
ஆனால்இ
இப்போது
இசையை
ரசிப்பது
போல்
போர்
விமானங்களின்
ஒலியை
ரசிக்க
ஆரம்பித்துவிட்டோம்'
என்கிறார்கள்!
வீட்டுச்
சிறையிலிருந்து
வெளியே
வந்த
எல்பரதேய்,
ஏதோ
தான்தான்
இந்த
மக்கள்
எழுச்சியை
வழிநடத்துவது
போல்
ஊடகங்களுக்கு
பேட்டியளித்தும்இ
புகைப்படங்களுக்கு
போஸ்
கொடுத்தும்
தன்
இருப்பை
அழுத்தமாக
பதிவு
செய்ய
முயற்சிக்கிறார்.
ஆனால்,
எகிப்து
மக்கள்
இவரை
ஒரு
பொருட்டாகவே
மதிக்கவில்லை.
காரணம்,
பலருக்கு
இவர்
யார்
என்றே
தெரியவில்லை!
எகிப்தின்
இன்றைய
மக்கள்
எழுச்சியை
யாரும்,
எந்தக்
கட்சியும்
முன்னின்று
நடத்தவில்லை.
எனவே
மக்கள்
மெல்ல
சோர்வடைந்து
பின்வாங்கி
விடுவார்கள்
என்று
நம்பிய
ஹுஸ்னி
முபாரக்,
இப்போது
மூக்குடைந்திருக்கிறார்.
நாள்தோறும்
முந்தைய
நாளின்
தீவிரத்தை
விட
அதிக
வலிமையுடன்
அனைத்து
நகர
தெருக்களிலும்
மக்கள்
இறங்கி
போராடினார்கள்.
தலைநகர்
கெய்ரோவிலுள்ள
தாஹீர்
சதுக்கத்தை
சுற்றிச்
சுற்றி
வளைத்தார்கள்.
இத்தனைக்கும்
அத்தியாவசிய
உணவுப்
பொருட்களுக்கு
தொடர்
போராட்டத்தினால்
தட்டுப்பாடு
ஏற்பட்டிருந்தது.
வீட்டில்
சமைக்க
பொருட்களில்லை.
உணவு
விடுதிகள்
திறக்கப்படவேயில்லை.
ஆயினும்
கிடைத்ததை
பகிர்ந்துக்
கொண்டு
சோர்வடையாமல்
உறுதியுடன்
போராடிவந்தார்கள்.
1905ல்,
ரஷ்யாவில்
புரட்சி
நடந்ததும்
அப்போது
மன்னராக
இருந்த
ஜார்
இரண்டாம்
நிக்கோலஸ்,
அக்டோபர்
அறிக்கையை
வெளியிட்டு
என்னவெல்லாம்
தேனொழுக
மக்களிடம்
பேசினாரோ
அதையே
இப்போது
ஹுஸ்னி
முபாரக்
எதிரொலிக்கிறார்.
'இந்த
ஆண்டு
செப்டம்பரில்
நடைபெறவுள்ள
அதிபர்
தேர்தலில்
போட்டியிட
மாட்டேன்.
தேர்தலை
ஜனநாயக
முறைப்படி
நடத்துவேன்.
என்னை
நம்புங்கள்...'
என்ற
அதிபரின்
இரண்டாவது
உரையும்
மக்களை
சமாதானப்படுத்தவில்லை.
மக்கள்
எழுச்சியை
மட்டுப்படுத்தவில்லை.
ஆனால்,
நடுத்தர
வர்க்கத்தை
ஓரளவு
ஜனாதிபதியின்
இந்த
இரண்டாவது
உரை
ஊசலாட
வைத்திருக்கிறது
என்பதையும்
மறுப்பதற்கில்லை.
இருந்தும்
நடுத்தர
வர்க்கம்
களத்திலிருந்து
பின்வாங்கவில்லை.
மாக்கியவெல்லி
கூறுவது
போல
'மக்களிடம்
அன்பை
பொழிவது
அரசாங்கத்தின்
வேலையல்ல.
பயத்தை
உண்டாக்குவதே
எந்தவொரு
அரசாங்கம்
நிலவவும்
அடிப்படை...'
இந்த
அடிப்படையில்
தான்
ஹுஸ்னி
முபாரக்கும்
பயம்
காட்டித்தான்
வந்தார்.
ஆனால்
அது
தலைகீழாக
மாறிவிட்டது.
'மன்னிக்கவும்
முபாரக்.
உன்னை
நாங்கள்
நம்பவில்லை.
உடனே
அதிபர்
பதவியை
விட்டு
விலகு.
உனக்காக
விமானம்
காத்திருக்கிறது...'
என
ஒரே
குரலில்
கோஷமிடுட்டார்கள்.
அமெரிக்கா
அரசு
மாற்றத்தை
விரும்பவில்லை.
ஆட்சி
மாற்றத்தையே
விரும்புகிறது.
அதனாலேயே
எல்பரதேய்யை
ஆதரித்தது.
அதேநேரம்
அதிபர்
ஓமர்
சுலைமான்
தலைமையில்
இடைக்கால
அரசாங்கம்
அமைக்கவும்
முபாரக்குக்கு
பரிந்துரை
செய்ததது.
இன்னொரு
நாசர்,
இன்னொரு
கொமேய்னி
அரபு
நாடுகளில்
உருவாகிவிடக்
கூடாது
என்பதில்
அமெரிக்கா
உறுதியாக
இருக்கிறது.
ஆனால்,
எகிப்து?
இந்தக்
கேள்விதான்
உலகம்
முழுக்க
தொக்கி
நிற்கிறது.
முக்கியமாக
'இஸ்லாம்
சகோதரத்துவ
கட்சி'
எகிப்தில்
செல்வாக்குடன்
இருக்கிறது.
எல்பரதேய்
போலவே
இக்கட்சியும்
'துனிசிய
மாதிரி'
புரட்சியை
விரும்பவில்லை.
ஆட்சி
மாற்றத்தை
மாத்திரமே
விரும்புகிறது.
எகிப்தின்
அனைத்து
பிரச்னைகளுக்கும்
ஹுஸ்னி
முபாரக்தான்
காரணம்
என்றும்
பிரச்சாரம்
செய்தது.
ஜனவரி
25 அன்று
ஆரம்பித்து
தொடர்ந்த
மக்கள்
எழுச்சியில்
– புரட்சியில்
– அமெரிக்காவுக்கு
எதிரான
கோஷங்கள்
எதிரொலிக்கவேயில்லை.
அமெரிக்க
தூதரகத்துக்கு
அருகாமையில்
உள்ள
ஆளுங்
கட்சி
அலுவலகத்தை
தீக்கரையாக்கிய
மக்கள்,
அமெரிக்க
தூதரகத்துக்கு
ஒரு
சின்ன
கீறலைக்
கூட
ஏற்படுத்தவில்லை.
சிறந்த
அதிபர்
என
உலக
வங்கி
முபாரக்குக்கு
விருது
கொடுத்து
கெளரவித்திருக்கிறது.
அந்தளவுக்கு
மறுகாலனியாதிக்க
கொள்கைகளை
முழு
மூச்சுடன்
அவர்
எகிப்தில்
அமல்படுத்தியிருந்தார்.
அதனால்தான்
வேலையில்லா
திண்டாட்டமும்,
தொழிலாளர்களின்
வேலை
பறிப்பும்,
ஏழ்மையும்,
உயர்
கல்வி
கட்டண
உயர்வும்,
உணவுப்
பொருட்களின்
விலையேற்றமும்
நிகழ்ந்தன.
மக்கள்
புரட்சியை
ரானுவத்திற்கு
தாரைவார்த்த
முர்சி
இஸ்லாமிய
பொருளாதார
கொள்கை
அமுல்
படுத்தப்படல்
வேண்டும்.
மக்களது
சிந்தனை
மாற்ற
திட்டங்கள்
உள்வாங்கப்படடிருக்கவேண்ம்.
முபாரக்கின்
ஆட்சியல்
மக்கள்
கற்றுக்கொண்ட
பாடங்களுக்கு
மாற்றுத்
தீர்வுகளை
முன்
மொழிய
வேண்டும்.
இவை
அனைத்தையும்
முர்சி
மறந்து
விட்டு
அவர்
IMF
உடனான
வட்டி
விவகாரத்தை
தொடர்ந்தும்
மேற்கொண்டார்.
நாட்டினது
வருமானத்தை
காப்பதற்கு
சுற்றுலாத்துறையினருக்கு
ஹிஜாபை
விதிவிலக்காக்கி
பிகினியை
ஹலாலாக்கியதுடன்
மதுக்கடைகளையும்
ஏனைய
வசதிகளையும்
அவர்களுக்கு
ஏற்படுத்தியிருந்தார்.
இஸ்ரேலுடனான
ஒப்பந்தத்தை
அவர்
பேணினார்.
மேற்கினதும்
அமெரிக்காவினதும்
உறவைப்
பலப்படுத்தினார்.
மக்களுக்கு
தெளிவாக
இஸ்லாத்தை
அமுல்படுத்துவோம்
என்று
கூறாது
ஜனநாயகம்
எனும்
பெயரில்
இஸ்லாத்தை
முன்வைக்க
முற்பட்டார்.
மக்கள்
ஏற்கனவே
30 வருடமாக
மத
ஒதுக்கல்
சிந்தனை,
மற்றும்
மேற்கினது
வாழ்கைமுறை
மற்றும்
கமியுநிச
சிந்தனை
போன்றவற்றால்
பாதிக்கப்பட்டிருந்தவர்கள்
கருதிய
ஜனநாயம்
அவர்களுக்கு
இல்லாத
நிலை
மக்களுக்கு
அதிதிருப்தி
ஏற்பட
வழிவகுத்தது.
அம்
மக்களுக்கு
இஸ்லாத்தின்
முக்கியத்துவம்
விளங்கவில்லை.
எகிப்திய
நாட்டுக்குள்
இருந்த
இராணுவத்திடம்
இஸ்லாதினது
முக்கியத்துவம்
உணர்த்தப்படவில்லை.
முர்சியும்
அதற்கு
முயற்சிக்கவுமில்லை
முர்சியும்
தனது
பதவியை
தக்கவைத்துக்கொள்வாதற்காக
தயாரிக்கப்பட்ட
அரசியல்
யாப்பு
சீர்
திருத்தத்தில்
கூட
எகிப்திய
ரானுவம்
புகுந்து
தமது
ரானுவ
தந்திரத்தின்
மூலம்
ரானுவத்தினது
அதிகாரத்தை
தக்கவைத்துக்கொண்டது.
(இந்த
அரசியல்
யாப்பினை
நவின
கால
இஸ்லாமிய
அறிஞர்களில்
ஒருவராகிய
êசுப்
அல்
கர்லாவி
அவர்கள்
புகழ்ந்து
இந்த
யாப்பு
உலகில்
எங்குமே
கணமுடியாத
சிறந்த
ஒரு
யாப்பு
என்றும்
வர்னித்தார்
இரானுவத்திடம்
அரசை
தாரை
வார்க்கும்
அதிகாரத்தையா
அவர்
சிறந்த
அரசியல்
யாப்பு
என்று
கர்லாவி
வர்னித்தார்.
நாட்டினது
உயர்மட்ட
தலைமைகள்
நிறுவனத்
தலைமைகள்
கல்விமான்களிடம்
இஸ்லாமிய
சிந்தனை
இருக்கவில்லை.
அவர்கள்
மேற்கினது
சிந்தனை
மற்றும்
வாழ்கைமுறையில்
நம்பிக்கை
வைத்திருந்ததால்
இஸ்லாம்
அமுலாக்கப்படுவதனை
ஒரு
அச்சுறுததலாக
உணர
ஆரம்பித்தர்கள்.இந்த
நிலைமைகள்தான்
எகிப்தினது
முர்சியினது
ஆட்சி
கவிழ்க்கப்படவும்
இஸ்லாத்தின்
மீது
மக்கள்
வைத்துள்ள
நம்பிக்கையில்
சரிவுக்கு
வழிவகுத்துள்ளது.
இஸ்லாத்தின்
ஆட்சிக்கு
பதிலாக
மேற்கத்தைய
ஜனநாயக
வழிமுறையில்
பல்கட்சி
அமைப்பினுள்
வலுவான
எதிர்கட்சியை
வைத்துக்கொண்டு
குப்பார்களது
உறவை
பேணியபடி
இஸ்லாத்தை
நாம்
அமுல்படுத்துவோம்
எனும்
போக்கு
நிச்சயம்
ஆரோக்கியமான
சூழலை
இஸ்லாத்திற்கு
ஏற்படுத்தாது.
அது
இஸ்லாம்
மீள்
எழுச்சிபெற
வழிவகுக்காது.
சூயஸ்
கால்வாயை
நாட்டுடைமையாக்கி
பிரான்ஸ்,
இங்கிலாந்து
அரசின்
ஏகபோகத்தை
ஒழித்த
நாசர்
ஆண்ட
மண்ணல்லவா
எகிப்து?
ஸ்டாலினை
நேசித்த
நாசர்
பிறந்த
பூமி,
இன்று
ஒவ்வொருவரையும்
புரட்சியாளனாக
உருவாக்கியிருக்கிறது.
நேற்று
துனிசியா.
இன்று
எகிப்து.
நாளை?
அல்ஜீரியா,
யேமன்,
ஜோர்டான்
என
அடுத்தடுத்து
பல
நாடுகள்இ
நாட்டு
மக்கள்,
எழுச்சிக்காக
– புரட்சிக்காக
காத்திருக்கிறார்கள்.
துனிசிய
நடைமுறை
எகிப்தின்
வர்க்க
அணி
சேர்க்கைக்கு
வழிவகுத்தது.
எகிப்தின்
நடைமுறை
நாளை
பிற
நாடுகளில்
நடைபெறப்
போகும்
மக்கள்
எழுச்சியில்
எதிரொலிக்கப்
போகிறது.
முதல்
உலகப்
போருக்குப்
பின்
ஏகாதிபத்தியங்கள்,
ஒன்றுபட்ட
அரபு
நாடுகளை
துண்டாடி,
பெயரளவுக்கு
சுதந்திரம்
கொடுத்து
தங்களுக்குள்
பங்கீடு
செய்து
கொண்டன.
அதற்கு
தோதாக
சர்வாதிகாரிகளையும்,
மன்னர்களையும்
ஆட்சியில்
அமர்த்தி
பாதுகாத்தன.
அதன்மூலம்
தங்களுக்கான
சுரண்டல்
காலனியாக
மாற்றின.
மறுகாலனியாதிக்கத்தை
அறிமுகப்படுத்தி
நாட்டின்
வளத்தை
உறிஞ்சின.
ஏகாதிபத்தியங்கள்
செய்த
அந்தப்
பங்கீட்டை
– மறுகாலனியாதிக்கத்தை
– இப்போது
மக்கள்
ஒன்றுதிரண்டு
புரட்சிக்கான
கருநிலையில்
மறுவார்ப்பு
செய்து
வருகிறார்கள்.
'நியூயார்க்
டைம்ஸ்'
சுட்டிக்
காட்டியுள்ளபடி,
அரபு
நாடுகள்
அனைத்தும்
மத்திய
கிழக்கு
நாடுகளுக்கான
தலைமைக்காக
மீண்டும்
எகிப்தையே
இன்று
எதிர்நோக்கியிருக்கின்றன.
மக்கள்
திரளின்
மீது
நம்பிக்கைக்
கொண்டு
சோர்ந்து
போகாமல்
தீரமுடன்
களத்தில்
நிற்கும்
ஒவ்வொரு
எகிப்தியனுக்கும்
புரட்சிகர
நல்வாழ்த்துகள்.
தற்போது
இந்த
போராட்டக்கலம்
கொலைக்கலமாக
மாறிவிட்டடது.
சிந்திக்கின்ற
ஒவ்வொரு
மனிதனுக்கும்
எகிப்திய
முர்சியின்
ஆட்சியில்
இருந்து
மிகப்பெரிய
படிப்பினைகள்
காத்திருக்கின்றன.
மக்களின்
வேறு
சிந்தனைகள்
கொண்ட
புரட்சிக்கு
இஸ்லாமிய
சாயம்
éச
முற்பட்டதனால்
வந்த
விளைவு
இன்று
கொலைக்கலமாக
உருவெடுத்துள்ளது.
அது
மட்டுமல்லாது
கிடைத்த
அதிகாரத்தை
சரிவர
பயன்
படுத்தாததனால்
வந்த
விளைவு
இன்று
எகிப்தினை
மனிதப்படுகொலைகள்
மிக்க
ஒரு
நாடாக
மாற்றிவிட்டது.
ஒரு
புரட்சிக்கு
சிறந்த
ஒரு
தலைமைத்துவம்
வழங்கப்படல்
வேண்டும்
எகிப்பதிய
புரட்சியில்
சிறந்த
ஓரு
தலைமைத்துவம்
புரட்சியை
வழிநடத்துவதில்
காணப்படவில்லை.
அனைத்து
தரப்பினரையும்
ஒன்றினைத்து
வழி
நடத்தாததன்
விளைவாகத்தான்
இன்று
அங்கு
இரத்த
ஆறு
ஓடக்
காரணமாயிருக்கின்றது.
நாம்
தீட்டும்
திட்டங்கள்
எல்லாவற்றினையும்
விட
இறைவன்
மிகப்
பெரிய
திட்டங்களை
தீட்டுவான்
என்பதை
நாம்
மறந்துவிடக்கூடாது.
'முபாரக்கின்
பிழைகளை
விமர்சிக்க
கற்றுக்கொண்ட
நாம்
முர்சியின்
பிழையை
விமர்சிக்க;
கூடாது
என்பது
எந்தவகையில்
நியாயம்?
இக்கட்டுறையின்
தொடர்
முர்சி
முதல்
சீ
சீ
வறை
விறைவில்
எதிர்
பாருங்கள்…………………………
No comments:
Post a Comment