Thursday, August 7, 2014

இலுமினாடி (ILLUMINATI) எனும் ரகசிய கூட்டத்தினர் யார் ? PART 2. U.H Hyder Ali

PART 2

இலுமினாடி (ILLUMINATI) எனும் ரகசிய கூட்டத்தினர் யார் ? அவர்களது கொள்கைகள் ………………………

U.H. Hyder Ali

இவர்களின் கொள்கை

”கடவுள் மனிதனின் எதிரி. சைத்தான்(லூசிபர்) LUCIFER தான் மனிதனின் நண்பன் (லுசிபரிசம்)” LUCIFERISM

அதாவது மனிதனைப் படைத்துவிட்டுக் கடவுள் அந்த மரத்தை நெருங்காதீர்கள் என்று சொன்னது மனிதனோடு உள்ள பொறாமையினால் ஆகும். சாகா வரம் அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்று அக்கனியைச் சாப்பிட்டால் மனிதனுக்குக் கிடைத்துவிடும் என்ற பொறாமைதான் கடவுளுக்கு இருந்துள்ளது. ஆனால் சைத்தான் எப்படியாவது மனிதனுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எண்ணியதால் தான் அவ் உண்மையை ஆதமுக்குச் சொன்னான். எனவே மனிதனுக்கு நலம் நாடுபவன் சைத்தானே.

நோக்கம், இலக்கு

”உலகத்தின் ஆட்சியை தஜ்ஜாலின் கையில் கொடுத்தல்”

அதாவது ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட லுசிபரிசத்தை மீண்டும் வெற்றிகொள்ளச் செய்தல்.

செயல் திட்டம்

மறைக்கப்பட்டுள்ள இதைத்தான் விரிவாக பேச உள்ளோம்.

இந்த லுசிபரிசக் கொள்கையானது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களுடைய இயக்கங்களாக வேறுபட்ட செயல்பாடுகளுடன் இயங்கி வந்துள்ளது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இயக்கம் ஆட்சி (dominant) செய்துள்ளது. ஒரே கால கட்டத்திலும் இக்கொள்கை வேறுபட்ட பெயர்களிலும் இயங்கி வந்துள்ளது. ப்ரீ மேசன்த்ரி என்பது இதன் பொதுப் பெயராகக் கொள்ளலாம்.

ஈசா நபி உயர்த்தப்பட்டதில் இருந்து முஹம்மது நபியின் காலம் வரை 2 இயக்கங்கள் அதிகம் செயல்பட்டது.

1. ஜெசுவிஸ்ட்.( இப்போது இது வத்திக்கானை ஆட்சி செய்யும் கூட்டமாக மட்டும் சுருங்கி விட்டது.

2. ப்ரியோரி டி சியோன்.

இவை 2 உம் ஈசா நபி Jesus கொண்டுவந்த உண்மையான மார்க்கத்தை அழிப்பதற்காக பாடுபட்ட இயக்கங்களாகும். ஈசா நபி Jesus பிறந்த மண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாத இத்தாலியில் உள்ள வத்திக்கானுக்கு கிரித்தவ தலைமையை மாற்றி அமைத்தது இவர்களின் வெற்றிக்கு சான்றாகும். ( இதன் முழு வரலாறு பின்னர் விளக்கப்படும்).

”முகம்மது நபிக்குப் பிறகு சிலுவை யுத்தக் காலப் பகுதியில் ஆட்சி செய்த இயக்கம் தான் நைட் டேம்ப்லேர்ஸ். இன்றைய காலத்தில் பெயர்பெற்று விளங்கும் இயக்கம்தான் இலுமிநாடி” 



Await More....

1 comment: