
இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் wiki standard பத்திரகையின் ஆசிரியரான Daniel Halper. கிளிண்டனுக்கும் மொநிகாவிற்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடல்களை பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகள் இரகசியமாக பதிவு செய்து வைத்திருந்ததாகவும், பின் எப்படியோ இதை மோப்பம் பிடித்த இஸ்ரேல் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 'ஜோனதன் பொல்லார்ட்' என்ற தனது உளவாளியை விடுதலை செய்வதற்கான ஒரு கருவியாக இந்த தொலை பேசி உரையாடல்களைப் பயன்படுத்த எத்தனித்ததாகவும் (கிளிண்டனை மிரட்டியதாகவும்) முடிவில், அமரிக்க தேசிய பாதுகாப்பு குழுவின் இறுக்கம் காரணமாக கிளிண்டன் இந்த முயற்சியில் இருந்து பின்வாங்கியதகாவும் இந்த புத்தகம் கூறுகிறது.
ஜோனதன் பொல்லார்ட் மத்திய கிழக்கு நாடுகளை உளவுபார்ப்பதற்காக இஸ்ரேலினால் நியமிக்கப்பட்ட அமெரிக்கர் என்பதும் இவர் 1985 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனைக் கைதியாக அமெரிக்க சிறையில் இன்று வரை அடைக்கப்பட்டிருப்பதும் கூடுதல் தகவல்.
மற்றும், இவர் அதிகாரத்தில் இருந்த காலத்தில் மிகவும் சிக்கலான பாலஸ்தீன்- இஸ்ரேல் பிரச்சனை தொடர்பாக கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டார். இவர் காலத்திலேயே யாசிர் அரபாத், இட்சாக் ராபின் இருவருக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Source: http://www.theblaze.com/blog/2014/07/21/claim-israelis-tried-to-blackmail-bill-clinton-with-lewinsky-tapes-for-release-of-spy/
No comments:
Post a Comment