Wednesday, January 28, 2015

சார்லி ஹெப்டோ! தொடரும் மர்மங்கள்....By Rasoolsha Sharoofi

கடந்த வாரம் பத்திரிகைகளைப் பார்த்தபோது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது, காரணம், எந்தப் பத்திரிகையும் அலட்டிக்கொள்ளாத முக்கிய விவகாரம் ஒன்றை கடந்த வாரம் செவ்வாய் (21/01/15)அன்று வெளியான 'லிபெராசியோன்' என்ற ஃபிரெஞ்சுப் பத்திரிகை ஆழமாகவே அலசியிருந்தது. உடனடியாக பதிவுசெய்ய நினைத்திருந்தேன், இன்றுதான் நேரம் கிடைத்திருக்கிறது.

சரி, விடயத்துக்கு வரும் முன் இந்த வருடத்தின் முதல் பயங்கரமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலக  தாக்குதலை கொஞ்சம் மனதுக்குள் ஓடவிடலாம்.....

சம்பவம் 1:
அது 2015 ஆம்  ஆண்டின் ஜனவரி 7 ஆம் திகதி, பாரிஸ் நகரத்தின் இதயப் பகுதியான 'ரிபப்ளிக்' பிரதேசத்துக்குள் புகுந்தது கருப்பு நிற 'சிற்றோஎன்' (C3)ரக கார். அதில் இருந்து இறங்கிய இரு ஆயுததாரிகள் நேரடியாக சார்லி ஹெப்டோ அலுவலகத்துக்குள் புகுந்து "யார் இங்கே  முஹம்மது (ஸல்) அவர்களை கேலி சித்திரமாகப் போடுவது?"என கேட்டார்கள்.

உள்ளே இருந்த ஒருவர் எழுவதற்கு முயற்சிக்கும் போதே துப்பாக்கிகள் பேச ஆரம்பித்தன. உள்ளே இருந்தவர்கள் ஒவ்வொருவராக செத்து விழ, கட்டிடத்தின் வேறு பகுதியில் இருந்தவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கட்டிடத்தின்  மொட்டை மாடிப்பகுதிக்கு விரைந்தார்கள். பாதுகாப்பான இடங்களில் பதுங்கினார்கள்.

இங்கே கொஞ்சம் நிறுத்தி 'லிபெராசியோன்பத்திரிகைக்கு வருவோம்...அப்படி பதறியடித்துக் கொண்டு மேலே ஓடிவந்தவர்களுள்  ஒருவர் மட்டும் குண்டு துளைக்காத மேலங்கியோடு நின்று ஆயுத தாரிகள் தப்பியோடுவதை தனது செல் போனில் படம் பிடிக்கும் காட்சி கேமாராவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அவர் வேறு ஒரு பத்திரகையின் நிருபர். அத்தனை நெருக்கடியான நேரத்திலும் அவர் மட்டும் எப்படி குண்டு துளைக்காத மேலங்கி சகிதம் வந்தார்? ஒரு வேளை நடக்கப் போகும் சம்வத்தின் பராதூரம் ஏற்கனவே அவருக்கு தெரியுமா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் இப்போது வலுக்கத் தொடங்கியிருக்கின்றன.

சம்பவம் 2.
மீண்டும் விட்ட இடத்துக்கு வருகிறேன்..... வெளியில் வந்த ஆயுத தாரிகள் கண்ணில், ஒரு போலிஸ் அதிகாரி குறுக்கே வர, துப்பாக்கிகள் அவரை நோக்கி திருப்பப் படுகின்றன. காயம் பட்ட போலிஸ் அதிகாரி கீழே விழுந்து எதோ பேச முயல்கிறார்... நெருங்கி வந்த ஆயுத தாரிகள் Point Blank  தூரத்தில்  (மிக அருகில்) வைத்து அவரை சுடுகின்றனர்.

கொஞ்சம் நிறுத்தி, 'லிபெராசியோன்' பத்திரிகைக்கு வரலாம்....
மிகவும் நெருங்கி வந்து சுடும் காட்சியில் உடலின் பாகம் சிதறுவதைப் போன்றோஇரத்தம் வழிவதைப் போன்றோ எந்த காட்சிகளையும் காண முடியவில்லையாம்! இது எப்படி சாத்தியம்? என சமூக வலைத் தளங்களில் கார சாரமான விவாதங்கள் போய்க் கொண்டிருப்பதாக 'லிபெராசியோன்' பத்திரிகை குறிப்பிடுகிறது. 

சம்பவம் 3.
 மீண்டும் ஆயுத தாரிகள் பக்கம் வருவோம்.... போலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்று விட்டு எந்தப் பதற்றமும் அவசரமும் இல்லாமல் ஆயுத தாரிகள் இருவரும் காரில் ஏறி சென்று விடுகின்றனர். ஒரு சில மணி நேரங்களின் பின் அவர்கள் பயன் படுத்திய கார் கண்டு பிடிக்கப்படுகிறது. அதன் பின் இருக்கையில் ஒரு பிரெஞ்சு அடையாள அட்டை கிடைக்கப் பெற்றதாக செய்தி வெளியாகிறது. அது 'சைட் கவுச்சி' என்பவருக்கு சொந்தமானது என்பதோடு அவரும் அவருடைய சகோதரருமே இந்த சம்பவத்தோடு நேரடியாக சம்பந்தப்ப்டிருக்கிரார்கள் என்ற முடிவுக்கு பிரெஞ்சு போலிஸ் வருகிறது... 


இங்கே கொஞ்சம் நிறுத்திக் கொள்வோம், முறையாக பயிற்றுவிக்கப்பட்டு, இத்தனை பக்காவாக திட்டம் போட்டுதாக்குதல் நடத்திவிட்டு செல்பவர்கள் சொந்த அடையாள  அட்டையை மட்டும் காருக்குள் தவற விடுவார்களா? டி.என். பரிசோதனைகள் ஏதும் செய்யாமல், அடையாள அட்டையை மட்டும் வைத்துக் கொண்டு இத்தனை உறுதியான முடிவுக்கு எப்படி பிரெஞ்சு போலிஸ் வந்ததுஎன்ற கேள்வி இயல்பாகவே பல சந்தேகங்களைக் கிளப்புவதாகக் கூறுகிறது லிபெரசியோன் பத்திரிகை.... 

இங்கே கொஞ்சம் நிறுத்திக் கொள்வோம், முறையாக பயிற்றுவிக்கப்பட்டு, இத்தனை பக்காவாக திட்டம் போட்டுதாக்குதல் நடத்திவிட்டு செல்பவர்கள் சொந்த அடையாள  அட்டையை மட்டும் காருக்குள் தவற விடுவார்களா? டி என் பரிசோதனைகள் ஏதும் செய்யாமல் அடையாள அட்டையை மட்டும் வைத்துக் கொண்டு இத்தனை உறுதியான முடிவுக்கு எப்படி பிரெஞ்சு போலிஸ் வந்ததுஎன்ற கேள்வி இயல்பாகவே பல சந்தேகங்களைக் கிளப்புவதாகக் கூறுகிறது லிபெரசியோன் பத்திரிகை.... 

நான்காவதாக, கவுச்சி சகோதர்கள் பயன்படுத்திய காரின்  பக்கவாட்டுக் (பின்னால் வருபவர்களைப் பார்பதற்காக பயன்படும்) கண்ணாடி வெள்ளி (silver) நிறத்தில் இருந்ததாகவும், பின்பு அவர்கள் பயன்படுத்தியதாக் காட்டப்பட்ட காரின் கண்ணாடி கருப்பு  நிறத்தில் இருப்பதாகவும் சர்ச்சைகள் கிளம்பியிருப்பதாக அப்பத்திரிகை குறிப்பிடுகிறது. 

(
http://www.liberation.fr/societe/2015/01/20/intox-l-attaque-contre-charlie-etait-attendue-un-journaliste-avait-un-gilet-pare-balles_1185025)

செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதல், மாயமாக மறைந்த மலேசியன் எயர் லைன் விமானம்... இவற்றுக்குப் பின்னால் நிறைந்து கிடக்கும் மர்மங்களைப் போல சார்லி ஹெப்டோ தாக்குதலும் சர்ச்சைகள் நிறைந்த சம்பவத்தில் ஒன்றாக எதிர் காலத்தில் இணைத்துக் கொள்ளப்படலாம்  என்றே எண்ணத் தோன்றுகிறது.

என்னைப் பொறுத்தவரையும் சார்லி ஹெப்டோ பத்திரிகை கருத்து சுதந்திரம் என்ற பதத்தை கோணலாக விளங்கிக் கொண்டது என்றே சொல்வேன். காரணம், அது முஹம்மது (ஸல்) அவர்களை 'இவர் வேற மாதிரி' என்ற கருத்தை பிரதி பலிக்கும் வகையில் கிண்டல் செய்தது மட்டுமல்ல, சகல  மதங்களையும்  புண்படுத்தும் வகையில் சமமாக அவமதித்தது. 

சிறுபான்மை  சமூகங்களுக்கு  இடையே வெறுப்பு அரசியலை உருவாக்கியதில் இப்பத்திரிகைக்கு அதிக பங்கு உண்டு. அரசியல் வாதிகள் பற்றி பிழையான செய்திகளை பிரசுரித்து பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்ட வரலாறும் இப்பத்திரிகைக்கு  உண்டு. 

அதே நேரத்தில் அதிக பிரதிகள் விற்பனையாக வேண்டும் என்ற விளம்பர நோக்கத்திலேயே சார்லி ஹெப்டோ இவ்வாறு நடந்து கொள்கிறது என்ற விமர்சனம் பல வருடங்களாகவே இப்பத்திரிகை மீது இருந்து வருவது இங்கே கவனிக்க வேண்டியது 

No comments:

Post a Comment