Wednesday, October 15, 2014

சகோதரனின் பயண அனுபவம்....

By R.M.Hilfi

ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறைக்காக நாட்டிற்கு வந்த நான் சென்ற வாரம் திரும்பவும் Qatar நாட்டிற்கு பயணிப்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தேன் . சரியாக விமானம் புறப்படுவதற்கு 30/40 நிமிடங்களுக்கு முன்னர் அதே விமானத்தில் பயணிப்பதற்காக இரண்டு அரபிகள் நுழைவாயிலுக்குள் நுழைந்தார்கள் அவர்கள் அரபிகள்தான் என்பதை அவர்கள் அணிந்திருந்த உடைகள் மிகவும் துள்ளியமாக காட்டிக்கொடுத்தன.

பின்னர் நான் விமானத்துக்குள் நுழைந்து எனது ஆசனத்தில் அமர்து கொண்டேன் . அந்த அரபிகளும் வந்து எனக்கு முன்னாள் உள்ள ஆசானங்களில் அமர்ந்து கொண்டனர். விமானம் புறப்பபடப் போகின்றது என்பதற்கு முன்னறிவிப்பாக விமானத்தில் ஒலி பெருக்கியில் பிரயாண துஆ அரபு மொழியில் சொல்லப்பட்டது (Qatar Airways என்பதால்,.... பெரும்பாலான விமானங்களில் பிரயாண துஆ அரபியில் சொல்லப்படுவதில்லை ) Right நானும் பிரயாண துஆவை ஓதிக்கொண்டேன். என்னத்தான் நவீன தொழிற்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டாலும் முடிவு ஒருவனிடத்தில் மாத்திரமே (50% ற்கு 50%) ஒன்று பாதுகாப்பாக தரை இறங்குவோம் அல்லது மௌத்தை தழுவுவோம். எவ்வளவு பாதுகாப்பாக பயணிக்கின்ற விமானக்கள் கூட இறுதி நொடிகளில் Landing Failure இனால் விமானத்தின் சில்லுகள் தரையை தொட்ட மாத்திரத்திலேயே வெடித்துச்சிதறிய சந்தர்பங்களும் உண்டு அல்லவா......
 

விமானம் பறப்பதற்கு முன்னர் ஓடுபாதையில் அதன் திசையை தீர்மானிப்பதற்காக நகரத்தொடங்கியது அந்த மாத்திரத்திலேயே எனக்கு முன்னால் அமர்ந்திருந்த அரபி விமானப் பணிப்பெண்ணை அழைத்து ஏதோ கூறினான், அவள் ஆங்கிலத்தில் தனக்கு விளங்கவில்லை என்று பல தடவைகள் கூறினால் அப்பொழுது நான் விளங்கிக்கொண்டேன் அவர்கள் இருவருக்கும் ஆங்கிலம் சரியாக கதைக்க வராது என்பதை. 

பின்னர் அவர்கள் இருவரும் தங்களுக்கு தெரிந்த ஆங்கில வார்த்தைகளையும் , சாடைகலாலும் எதோ சொல்லி அப்பணிப் பெண்ணுக்கு புரிய வைத்தனர். அவர்கள் என்ன கேட்டார்கள் என்பதை நான் அவதானிக்கவில்லை அவள் “விமானம் Take Off ஆகும் வரை காத்திருக்கும்படியும் , தங்களுடைய ஆசனப்பட்டிகளை அணிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்திச் சென்றதை கேட்டேன். 

விமானம் புறப்பட்டு சில நொடிகளிலேயே அப்பணிப்பெண் அவர்களிடத்தில் வந்தாள், அவர்களும் ஏதோ சாடைகளினாலும் தங்களுடைய ஆங்கிலத்தினாலும் பேசி அவளுக்கு புரிய வைத்தனர். அவளும் எதோ எழுதி எடுத்துக்கொண்டு சென்றாள். சிறிது நேரத்தில் இரண்டு உயர் ரக “வைன்” போத்தல்களும் அவற்றிற்கான பரிமாறும் கோப்பைகளும் , Mixing , Bites என பல Item கள் அவர்களுக்கு முன் படைக்கப்பட்டன, இப்பொழுது எனக்கு தெளிவாக விளங்கியது அவர்களுக்கு என்ன தேவை இருந்தது என்பது. இதனைப்பார்த்து எனக்கு பக்கத்து ஆசனத்தில் இருந்த ஒரு ஆங்கிலேயன் (அங்கிலேயனோ / யூதனோ நமது பாசையில் ஒரு வெள்ளைக்காரன் ) தனக்கு பக்கத்தில் இருந்த தனது மனைவியிடம் (மனைவி என்றுதான் நினைக்கின்றேன் அதற்கு பக்கத்து ஆசனங்களில் குழந்தைகள் இருந்தார்கள் ) முன்னால் உள்ள ஆசனத்தை காட்டி ஏளனமாக எதோ கூறியதையும் நான் அவதானித்தேன்.... அப்பொழுது நான் என்னக்குள் எண்ணிக்கொண்டேன் மார்க்கம் மண்ணில் மட்டும் அல்ல , வானில் கூட வாழ வில்லை என்பதை. 

அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாத அந்த தருணத்தில் கூட அரபிகள் இருவரிடத்திலும் எந்த அளவு மார்க்கம் உயிர்பெற்று இருந்தது என்பது எனக்கு நன்றாக தெரிந்தது..... அவர்கள் விமானம் புறப்பட்ட நேரத்தில் இருந்து தரையிறங்குவதற்கு ஒரு 30 நிமிடதிற்கு முன் கிட்டத்தட்ட 4.30 மணி நேரங்கள் தன்னுடைய குடியை நிறுத்தவில்லை , அடிக்கடி எழுந்து wash room ற்கு நிலை தடுமாறி நடப்பதும் பின்னர் மீண்டும் வந்து தங்களது குடியை தொடர்வதுமாக இருந்ததை அந்த விமானத்தில் பயணித்த அநேகமானவர்கள் அவதானித்திருப்பார்கள்.

விமானப்பணிப்பெண் அடிக்கடி அவர்களிடத்தில் வந்து சேவை செய்வதும் , அவர்களுக்கு மீண்டும் மீண்டும் போத்தல்களையும் இதர பல Item களையும் கொண்டு வந்து பரிமாறிக்கொண்டே இருந்தாள். ஒரு வேளை இவர்கள் அரபிகள் என்பதால் Qatar Airways இல் இவர்களுக்கு Special சலுகையாக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டேன். 

தரையிறங்குவதற்கு ஒரு 30 நிமிடதிற்கு முன் அப்பணிப்பெண் அவர்களிடத்தில் வந்து Sir! Time to landing, please…( குடியை நிறுத்துமாறு வேண்டி).How would you like to pay Sir? By cash …By Card என்று கேட்க அவர்கள் என்ன சொன்னார்களோ தெரியாது By Card என்று அவள் தலையசைத்து தனது கையில் இருந்த ஏட்டில் எதோ எழுதி விட்டு அவ்விடத்தை விட்டு சென்றாள்.50 ற்கும் 60 ற்கும் இடையில் வயதை மதிப்பிடக்கூடிய தோற்றத்தை கொண்டிருக்கும் அவர்களிடம் ஒரு துளியேனும் இஸ்லாம் பிரதிபலிக்கவில்லை பின் எப்படி இவர்களின் பிள்ளைகளிடத்திலும் சந்ததிகளிடத்திலும் இஸ்லாம் இருக்கும்.
இதை எனக்கு எழுத வேண்டும் எனற என்னத்தை தோற்றுவித்த இன்னொரு சம்பவம் அடுத்த நாள் அதிகாலையில் நடந்தது.

அடுத்த நாள் காலை சுபஹ் தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு சென்றிருந்தேன்.அங்கு நான் ஒரு அரபிக்கு பக்கத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது , பொதுவாக எமது ஊரில் பள்ளிகளில் சப்புகளில் ஜமாஅத் தொழுகைக்காக நிற்கும் போது தோல்களுடன் தோல் சேர்த்து , பாதங்களுடன் பாதங்கள் சேர்த்து நெருக்கமாக நிற்பது வழமை. அதைத்தான் தொழுகை ஆரம்பிக்கும் முன் இமாமும் வலியுறுத்துவார்.
ரசூலுள்ளஹ்வின் வழிமுறையும் கூட .இங்கு அரபிகள் எப்படியோ தெரியாது ஆனால் அவர்கள் மற்ற நாட்டுக்காரர்களின் பக்கத்தில் தொழுகைக்காக வந்து நின்றால் நெருக்கமாக வந்து சேரமாட்டார்கள்.சற்று தள்ளி நின்று கொள்வதை அவதானித்தும் ,அனுபவித்தும் இருக்கின்றேன்.இதனால் நான் சற்று தள்ளியே சப்பில் நின்று கொண்டேன்.

ருக்கூஉ வினுடைய வேளையில் எனக்கு வலது பக்கம் இன்னொரு அரபி வந்து சேர்ந்து கொண்டார அவரும் அந்த இடைவெளியில் சிறிதளவேனும் நெருங்கிக் கொள்ளவில்லை.எனக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் ஒருவர் புகுந்து வெளியேறக்கூடிய அளவு இடைவெளி. சரி ருக்கூஉ ற்காக குனிகின்ற போது எனக்கு இடப்பக்கம் இருந்தவரின் வாயில் இருந்து சும்மா சுல்லென்று வீசியது சிகரட் வாடை ( அதிகாலை 4.00 மணிக்கும்...........தங்களுடைய வாகனங்களின் உள்ளே இருந்து அரபிகள் சிகரட் புகைப்பதை விரும்புவதில்லை சிகரட் வாடை வாகனங்களுக்குள் மணக்குமாம், கீழே இறங்கி சிகரட் குடித்து முடித்து விட்டுதான் வாகனங்களுக்குள் ஏறி உட்காருவார்கள், அவர்கள் தங்களுடைய வாகனக்களுக்கு அளிக்கும் மரியாதையைக்கூட அல்லாஹ்வின் மாளிகைக்கு கொடுக்க தயாரில்லை )

 ஒரு மாதிரியாக தொழுகை முடிந்து சலாம் கொடுக்கப்பட்டது தொழுகைக்கு பின்னுள்ள திக்ருகள் கூட சொல்ல ஆரம்பித்து இருக்க மாட்டார் இம்மாம் . எனக்கு வலது பக்கம் தொழுத அரபி சத்தம் இட்டு கத்துகின்றான் இமாமை நோக்கி தன்னுடைய விரல்களை நீட்டி கத்துகின்றான் எனக்கும் ஒன்றும் விளங்கவில்லை சுமார் 10 நிமிடங்கள் வரை இமாமை நோக்கி சாடியவனாக சத்தம் இட்டு கத்திக்கொண்டிருக்கின்றான் .

நான் இமாம் தொழுகையில் ஏதோ பிழை விட்டு விட்டாரோ அல்லது ஓதிய சூராக்களில் ஏதேனும் தவறாக ஒதிவிட்டாரோ என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். பதிலுக்கு இம்மாமும் எதோ சொல்ல எத்தனிக்கின்றார் ஆனால் அவன் தனது வசைப்பாடலை நிறுத்துவதாக இல்லை .பின்னர் இமாம் எழுந்து சென்று Remote ஐ எடுத்து அவனுக்கு பின்னல் இருந்த A/C ஐ Switch on செய்தார் எனக்கு எல்லாம் விளங்கியது.
இந்த உலகம் எங்கே செல்கின்றது , எமது மார்க்கமும் , குரஆனும் எங்கே நிற்கின்றது, குர்ஆன் இறக்கப்பட்ட மொழியுடன் நேரடியாக தொடர்புடைய இந்த முஸ்லிம்களிடத்தில் இஸ்லாம் தூரமாகப்பட்டுவிட்டது.........

“இஸ்லாம் எப்படி ஒரு அந்நியமான ஒரு சமூகத்தில் இருந்து தோன்றியதோ, அதேப்போல அது அந்நியமாகிப்போகும்” என்ற ரசூலுல்லாஹ்வின் ஹதீஸை எனக்குள் நான் மீட்டிப் பார்த்துக்கொண்டேன்.........

No comments:

Post a Comment